fbpx

பெண்கள் ஹோட்டலுக்கு செல்ல தடை விதிப்பு..!! தாலிபான்கள் அதிரடி உத்தரவு..!!

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில், புல்வெளிகளுடன் கூடிய உணவகங்களுக்குப் பெண்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ செல்லக் கூடாது என தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். தாலிபான்கள் இத்தகைய கட்டுப்பாடுகளை ஹெராத் மாகாணத்தில் மட்டும் விதித்துள்ளனர். கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாகப் பெண்களுக்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

6ஆம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்றும், பல்கலைக்கழகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வேலைக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இந்நிலையில் மேற்கத்திய இசைகள், மேற்கத்தியத் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். சில வகை வீடியோ கேம்களை குழந்தைகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில், புல்வெளிகளுடன் கூடிய உணவகங்களுக்குப் பெண்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இறந்தவர்களின் ஆதார் கார்டுகளை என்ன செய்ய வேண்டும்..? இதைப் பற்றி யோசிச்சி பார்த்திருக்கீங்களா..?

Tue Apr 11 , 2023
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டை வங்கிக் கணக்கு எண், பான் கார்டு எண், ரேஷன் கார்டு, மின் கட்டணம் போன்ற பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பணிகளுக்கும் ஆதார் அட்டை அத்தியாவசியமாக மாறியுள்ளது. இந்நிலையில், இறந்தவர்களின் ஆதார் கார்டுகளை செயலிழக்க செய்ய தற்போது எந்த ஒரு […]

You May Like