fbpx

பெண்கள் பாதுகாப்பாக இல்லை!… மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பகிரங்க குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் பெண்களும், பத்திரிகையாளரும் பாதுகாப்பாக இல்லை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்தின் 4வது தூணுக்கு ஏற்பட்ட அவமானம். பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும். இதனை காக்க மம்தா அரசு தவறிவிட்டது. பத்திரிகை சுதந்திரத்தை காப்பதில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது. மேற்கு வங்க முதல்வர் இனி இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் பெண்களும், பத்திரிகையாளரும் பாதுகாப்பாக இல்லை. மத்திய அமைச்சர்கள் சிலர் சண்டிகருக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தி உள்ளனர். வன்முறை மற்றும் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340ஆக உயர்த்தி உள்ளோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

2013-14ல் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.7,30,000 கோடி செலுத்தப்பட்டது. ஆனால் பா.ஜ., ஆட்சியில் கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 3 மடங்கு அதிகம் ஆகும். பா.ஜ., அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறது. நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்து எதுவும் செய்யாதவர்களை விவசாயிகளுக்கு பா.ஜ., அரசு ஏதும் செய்யவில்லை என சொல்லக் கூடாது. இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.

English summary:Union Minister Anurag Thakur has alleged that women and journalists are not safe in West Bengal.

Readmore:நிர்வாணமாக வீடியோ காலில் பேச்சு.! ஆபத்தாய் முடிந்த இன்ஸ்டா காதல்.!

Kokila

Next Post

Pollachi | நாட்டையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு..!! வீடியோ ஆதாரங்களுடன் 9 பேர் ஆஜர்..!! விரைவில் தீர்ப்பு..!!

Fri Feb 23 , 2024
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த 2019ஆம் ஆண்டு புகார் எழுந்தது. 2019 பிப்ரவரி 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்ததன் மூலம் இந்த மிகப்பெரிய குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. […]

You May Like