நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் 32 வயதான ஆறுமுகம். தாமரை பூ வியாபாரம் செய்து வரும் இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 22 வயதான ஜெயஸ்ரீ என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்ற ஆறுமுகம், இரவு 8 மணிக்கு வீட்டிற்க்கு வந்துள்ளார். ஆனால் வீட்டில் ஜெயஸ்ரீ இல்லை. நீண்ட நேரம் ஆகியும் ஜெயஸ்ரீ வீடு திரும்பவில்லை. கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சந்தேகம் அடைந்த ஆறுமுகம், ஜெயஸ்ரீ குறித்து அவரது உறவினர் மற்றும் தோழிகளிடம் விசாரித்துள்ளார். ஆனால் ஜெயஸ்ரீ பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் பதறிப்போன ஆறுமுகம், இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் புதுப்பெண்ணான ஜெயஸ்ரீ கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது சென்றாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணம் ஆனா 3 மாதத்தில் மணமகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.