தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு இனி வரும் நாட்களில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த திட்டத்தில்0 முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை பெற கூடிய பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. இவர்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்படும்போதும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணமாகி குடும்ப தலைவியாகும் பெண்களும் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இன்னும் சில நாட்களில் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வந்ததும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசியிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ வழங்கி வருகிறோம். கூடுதலாக எவ்வளவு பேருக்கு ரூ.1,000 வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள பெண்களுக்கு 3 மாதத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படும் என தெரிவித்திருந்தார்.