அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு கட்டடத்தில் ஒரு நகரமே இயங்கிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏங்கரேஜிலிருந்து தென்கிழக்கே சுமார் 58 மைல்கள் தொலைவில் உள்ள பாசேஜ் கால்வாயின் கடைசியில் உள்ள அமைந்துள்ளது விட்டியர் என்னும் பகுதி. இங்கு ஒரே ஒரு கட்டடத்தில் நகரம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நகரத்தின் பெயர் பெகிச் டவர்ஸ் என்றழைக்கப்படுகிறது. இது ஒரு கூரையின் கீழ் உள்ள நகரம் என்ற புனைப்பெயரை பெற்றுள்ளது. 1915ம் ஆண்டில் அலாஸ்கா பகுதியில் உள்ள பனிப்பாறைக்கு அமெரிக்க கவிஞர் ஜான் கிரீன் லீஃப் விட்டியர் பெயர் வைக்கப்பட்டது .1943ல் அலாஸ்கா ரயில்பாதையின் ஸ்பர் கேம்ப் சல்லிவன் கட்டி முடிக்கப்பட்டது.
1953ல் அலாஸ்காவின் ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் தங்குவதற்காக 15 மாடிகள் உள்ளதாகவும், இங்கு சுமார் 300 பேர் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த கட்டடத்தில் 150 வீடுகள் இருக்கின்றன. இவற்றுள் பெரும்பான்மையானவை 3 படுக்கை அறைகளை கொண்டவை என சொல்லப்படுகிறது. இந்த ஒரே கட்டடத்திற்குள்ளேயே மருத்துவமனை, காவல் நிலையம், தபால் நிலையம், சூப்பர் மார்க்கெட், சர்ச் மற்றும் உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம் தொடக்கப்பள்ளி என ஒரு நகரத்தில் என்னென்ன கட்டடங்கள் இருக்கவேண்டுமோ அது எல்லாமே இந்த ஒரே கட்டிடட்த்திற்குள் இருக்கின்றன.
கடுமையான காலநிலை காரணமாக இங்குள்ள மாணவர்கள் மேற்கு பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றுவர நிலத்திற்கு அடியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கடல்வழியாகவும் சீவார்ட் நெடுஞ்சாலை வழியாகவும் இந்த நகரத்தை அடையலாம். ஒருபுறம் மலை, மறுபுறம் கடல் இந்த நகரத்தின் சுரங்கப்பாதைகள் இரவு 10.30 க்கு எல்லாம் மூடப்படுகிறது. பனிமலைகள் சுற்றி இருப்பதால் பெரும்பாலான நாட்களில் பனிகளால் இந்த பகுதி சூழப்பட்டு இருக்கும். 1990 களில் இந்த கட்டடம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது