fbpx

இரவு, பகலாக மாறி மாறி வேலை..!! திருமண உறவுக்கு நேரம் இருக்கிறதா..? விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் கேள்வி..!!

உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதிகளின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி நாகரத்தினா ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் நீங்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறீர்கள். ஒருவருக்கு பகலிலும் மற்றொருவருக்கு இரவிலும் வேலை. இதில் திருமண உறவை பேணுவதற்கு உங்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. ஆனால், திருமணத்தில் வருத்தம் இருக்கிறது.

இந்த திருமண பந்தத்தை பேணுவதற்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க கூடாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். ஆனால், தம்பதிகளின் வழக்கறிஞர் இருவரும் விவாகரத்துக்கு சம்மதித்து விட்டனர் எனவும், மனைவிக்கு ஒரே நேரத்தில் ரூ.12.50 லட்சத்தை ஜீவனாம்சமாக தருவதற்கு கணவர் ஒப்புக்கொண்டு விட்டார் எனவும் தெரிவித்தார். மேலும், இதை தொடர்ந்து நீதிபதிகள் தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.

Chella

Next Post

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை….! இல்லத்தரசிகள் ஷாக்…..!

Mon Apr 24 , 2023
சென்ற சில தினங்களாகவே இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது தங்கத்தின் விலை 45 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகின்ற நிலையில், தற்போது 45 ஆயிரத்திற்கு கீழே குறைந்திருக்கிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 216 அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 5,615 ரூபாயாகவும் ஒரு […]
#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

You May Like