அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெண் ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. “வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான அறிவிப்பை கடந்த பட்ஜெட்டின் போது முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டார். இதை செயல்படுத்த, மாநில அரசு mahilawfh.rajasthan.gov.in ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, ”என்று மாநில அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்..
பணிக்கு செல்லும் பெண் ஊழியர்கள் இந்த போர்ட்டலில் ஜனதார் கார்டு மூலம் பதிவு செய்ய வேண்டும், பின்னர் அவர்களுக்கு இழப்பீடு அல்லது சம்பளம் சம்மந்தப்பட்ட துறை அல்லது நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும்.
20 சதவீத பெண்களை சேர்க்கும் நிறுவனங்களுக்கு ராஜஸ்தான் அரசு நிதியுதவி அளிக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்திற்காக, ராஜஸ்தான் அரசு 100 கோடி ரூபாய் பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது மற்றும் ஆறு மாதங்களில் சுமார் 20,000 பெண்களுக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை, 150க்கும் மேற்பட்ட பெண்களும், 9 நிறுவனங்களும் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளன.