fbpx

’வேலை செய்யுங்கள் இல்லையென்றால் விருப்ப ஓய்வு பெற்று வேலையை விட்டு வெளியேறுங்கள்’..! மத்திய அமைச்சர் எச்சரிக்கை

ஒழுங்காக வேலை செய்யுங்கள் அல்லது விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு வேலையை விட்டு வெளியேறுங்கள் என பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பி.எஸ்.என்.எல். அமைப்பின் மூத்த நிர்வாகிகளுடன் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். அதற்கு முந்தைய தினம் தான் பிஎஸ்என்எல் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்ய ரூ.1.64 கோடி நிதியை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், அந்த கூட்டத்தில் அமைச்சர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ”உங்களுடைய செயல்பாட்டை நான் ஒவ்வொரு மாதமும் முறையாக கணக்கிடுவேன். யார் எல்லாம் வேலை செய்ய விரும்பவில்லையோ அவர்கள் விருப்ப ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்லலாம் அல்லது ரயில்வே துறையில் நடந்தது போல விருப்ப ஓய்வு எடுக்கும் நிலைக்கு நீங்கள் ஆளாவீர்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து விட்டது. இனி நீங்கள் தான் செயல்பட வேண்டும். வேலை செய்யுங்கள் அல்லது வேலையை விட்டு வெளியேறுங்கள். அப்போது தான் இந்த போட்டி நிறைந்த சூழலில் வெற்றி பெற முடியும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த விளைவுகளை நீங்கள் நிகழ்த்தி காட்ட வேண்டும். மாதம் தோறும் உங்கள் பணி அறிக்கையை நான் பார்க்கப்போகிறேன்.

’வேலை செய்யுங்கள் இல்லையென்றால் விருப்ப ஓய்வு பெற்று வேலையை விட்டு வெளியேறுங்கள்’..! மத்திய அமைச்சர் எச்சரிக்கை

தற்போது இருக்கும் சூழலில் உங்களுக்கு ஒதுக்கிய நிதி என்பது மிகப் பெரியது. இதன் மூலம் உலகில் எந்த அரசும் எடுக்க துணியாத ரிஸ்க்கை பிரதமர் மோடி எடுத்துள்ளார். எனவே ,பிஎஸ்என்எல்-இல் வேலை பார்க்கும் சுமார் 62,000 ஊழியர்களும் முழு அர்ப்பணிப்புடன் வேலை பார்க்க வேண்டும். மேலும், பிஎஸ்என்எல் மற்றும் பிபிஎன்எல் இணைப்பு நடவடிக்கை மூலம் நாட்டின் ஆப்டிக் பைஃபர் இணைப்பு நீளம் 6.83 லட்சம் கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கிராமங்களுக்கு ஆப்டிக் பைஃபர் சேவைகள் கிடைத்துள்ளது” என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Chella

Next Post

ஊரார் பணத்தை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை..! களவாணி குடும்பத்தை காரை வைத்து கைது செய்தது காவல்துறை..!

Sun Aug 7 , 2022
குடும்பத்துடன் காரில் ஊர் ஊராக சென்று, கோவில் திருவிழாக் கூட்டத்திற்குள் புகுந்து பெண்களிடம் நகைகளை பறித்துச் செல்லும் களவாணி குடும்பத்தை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் பல்வேறு பகுதிகளில் நடந்த கோவில் திருவிழாக்களில் கூட்டத்திற்குள் புகுந்து பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை களவாடிய கொள்ளையர்களை பிடிக்க காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு தனிப்படை ஒன்றை அமைத்தார். இதையடுத்து, தனிப்படை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், சிசிடிவி காட்சிகளை […]

You May Like