fbpx

வீட்டில் இருந்து வேலை செய்வதால் ஆபாச படங்களின் அடிமைத்தனம் அதிகரிப்பு.. பகீர் தகவல்..

கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்தில் ஆபாச படங்களின் அடிமைத்தனம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை பிரபலமடைந்ததால், இங்கிலாந்தில் ஆபாச படம் பார்ப்பவரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் சில சாதாரண ஆபாச பார்வையாளர்களை அடிமையாவதுடன், ஏற்கனவே அடிமையாக உள்ளவர்களின் நிலையை மோசமாக்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.. 2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் ஆபாச படத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 750ஆக உள்ளது.. இது 2019 ஆம் ஆண்டு முழுவதும் 950 ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

லண்டனில் உள்ள லாரல் சென்டர், பிரிட்டனில் உள்ள மிகப்பெரிய பாலியல் மற்றும் ஆபாச போதை மீட்பு மருத்துவமனை, தற்போது ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வரை ஆபாசத்தைப் பார்க்கும் சில தொலைதூர பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகக் கூறியது.

அந்த கிளினிக்கின் மருத்துவ இயக்குனர் பவுலா ஹால் கூறுகையில், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை என்பது மக்கள் தங்கள் கணினிகளுக்கு முன் எப்போதும் தனிமையில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று அர்த்தம். உங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அர்த்தம், இரவில் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை ஆபாச அடிமைத்தனம் அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணம்..” என்று தெரிவித்தார்..

லண்டன் கிளினிக்கில் சிகிச்சை பெறுவோர் ஒரு மாதத்திற்கு 600 மணிநேரத்தை ஆபாச படங்களை பார்க்க செலவிடுகிறார்கள் என்றும், 2019 இல் மாதத்திற்கு வெறும் 360 மணிநேரம் மட்டுமே செலவழித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

இறுதிச்சடங்கில் சிரித்து கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுத்தது ஏன்..? குடும்பத்தினர் விளக்கம்...

Thu Aug 25 , 2022
சமூக வலைதளங்களில் தினமும் ஏதாவது ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. அந்த வகையில் மூதாட்டியின் இறுதிச்சடங்கில் குடும்பமே சிரித்த படி போஸ் கொடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது… கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே மல்லப்பள்ளியை சேர்ந்த மரியம்மா என்ற 95 வயது மூதாட்டில் கடந்த வாரம் காலமானார்.. இந்நிலையில் அந்த மூதாட்டின் உடலுக்கு அருகே, அவரது குடும்பத்தினர் சிரித்த படி போஸ் கொடுத்த போட்டோ வைரலானது.. இதையடுத்து சமூக […]

You May Like