fbpx

‘ஜப்பான் காரன் மூளையே தனி தான்ப்பா..’ உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்!

உலகின் முதல் 6ஜி சாதனத்தை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது. அந்த நாட்டில் இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இதனை கட்டமைத்துள்ளன. இந்த 6ஜி சாதனம் மாதிரி வடிவம் (ப்ரோட்டோடைப்) என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் இண்டர்நெட் வேகம் கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் அதிகரித்திருக்கும் வேளையில், ஒவ்வொரு நாடும் அடுத்தகட்ட சேவை மேம்பாடுக்கு தயாராகி வருகிறது. இந்தியாவில் இன்னும் முழுமையாக 5ஜி சேவை மக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு வராத நிலையில் ஜப்பான் நாட்டில் 6ஜி சேவை சோதனை செய்யப்பட்டு உள்ளது.

உலகில் முதன் முதலில் நெட்வொர்க் துறையில் 2G வந்தது. பின்னர் அதைத்தொடர்ந்து 3G,4G போன்ற நெட்வொர்க்குகள் அறிமுகம் செய்யப்பட, தற்போது அதிவேகம் கொண்ட சமீபத்திய நெட்வொர்க்காக 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க் சேவை கொண்டு வரப்படும் என ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இதற்கிடையில், உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஜப்பான் தற்போது 6ஜி சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த பிரபலமான டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, 6ஜி புரோட்டோடைப்பை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த சோதனையின் மூலம் அடுத்த தலைமுறை நெட்வொர்க் 6G-யின் வேகம் எவ்வளவு இருக்கும் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். 

5G சேவையில் இருக்கும் வேகத்தை விட, 6G நெட்வொர்க்கின் வேகம் சுமார் 20 மடங்கு அதிகமாக இருக்கும் என ஜப்பான் தெரிவித்துள்ளது. அதாவது நொடிக்கு 100GB வேகத்தில் தரவுகளை வேகமாகப் பகிர முடியும். வெறும் புரோட்டோடைப் வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் இவ்வளவு வேகம் கிடைத்துள்ளதென்றால், இதற்காகவே உருவாக்கப்படும் உண்மையான சாதனத்தில் இதன் வேகம் மேலும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Post

பெண் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Zomato CEO!

Thu May 9 , 2024
தனது நிறுவனத்தில் 10 ஆண்டுகாலமாக பணிபுரியும் பெண் ஊழியரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சொமேட்டோ சிஊஓ. சோமாட்டோவின் சிஇஓ தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியரின் 10 ஆண்டு கால நிறைவையொட்டி,  “போட்டோ கேக்” செய்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.  மேலும் அவரே அந்த கேக்கை ஊழியருக்கு டெலிவரி செய்தார். இது தொடர்பாக சோமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். […]

You May Like