fbpx

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை..!! 206 அடி உயரம், 400 டன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்..!! சுவாரஸ்ய தகவல்..!!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு விஜயவாடாவில் 206 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்வராஜ் மைதானத்தில் அமைந்துள்ள அந்த சிலைக்கு ’சமூக நீதிக்கான சிலை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள பகுதி ஸ்மிருதி வனம் என அழைக்கப்படுகிறது. அதில், 81 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்தில், 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது.

இத்திட்டம் ரூ.404.35 கோடி செலவிலும், 18.81 ஏக்கர் பரப்பளவிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலைக்காக சுமார் 400 டன் எடையிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விஜயவாடாவில் உள்ள இந்த அம்பேத்கரின் சிலையானது, நாட்டின் உயரமான மதச்சார்பற்ற தலைவரின் சிலையாகவும் கருதப்படுகிறது. உலகின் 2-வது உயரமான அம்பேத்கர் சிலை, அண்டை மாநிலமான தெலங்கானாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகின் உயரமான 50 சிலைகளுக்கான பட்டியலிலும் இது இடம்பெற்றுள்ளது.

உலகிலேயே உயரமான அம்பேத்கர் சிலை என்ற பெருமையை பெறும் இந்த சிலை, முழுவதுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. சிலையின் வடிவமைப்பு தொடங்கி கட்டுமானம், மூலப்பொருட்கள் பெறுவது மற்றும் தோற்றத்தை இறுதி செய்வது வரையிலான 100% பணிகளும் இந்தியாவிலேயே நடைபெற்றுள்ளன. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஏஜென்சியான M/s KPC ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் கட்டுமான பணியை செய்துள்ளது.

திட்டத்தின் வடிவமைப்பு நொய்டாவில் உள்ள M/s டிசைன் அசோசியேட்ஸால் செய்யப்பட்டுள்ளது. சிலையை நிறுவுவதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்வராஜ் மைதானத்தை மாநில அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இது அனைவராலும் அணுகக்கூடியதாக, நகரின் மையத்தில் உள்ளது. இதனால், இந்த சிலை இருக்கும் பகுதி மிகப்பெரிய சுற்றுலா தளமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலை இருக்கும் பகுதி முழுமையாக பசுமையானதாக மாற்றப்பட்டுள்ளது.

பீடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் முன்புறத்தில் ஆறு நீர்நிலைகள், மையத்தில் இசை நீரூற்று, பீடத்திற்கான 3 பக்கங்களில் புற நீர்நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் காலை மற்றும் மாலையில் நடைபயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டு, முழுப் பகுதியும் அழகிய பசுமையான நிலப்பரப்பாக மாற்றப்படுகிறது. சிலைக்கு கீழே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அம்பேத்கர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் எல்.ஈ.டி திரைகளில் காட்சிப்படுத்தப்படும். 2,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8,000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை பூங்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் அமைந்துள்ளன.

Chella

Next Post

AI தொழில்நுட்பத்தால் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் டெக் நிறுவனங்கள்..!! ஜனவரியில் மட்டும் 7,500 பேர்..!!

Thu Jan 18 , 2024
இந்தாண்டு ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் மட்டும் 7,500 ஊழியர்களின் பணிகளை, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள் பறித்துள்ளன. கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், மாபெரும் பணிநீக்கத்துடன் இந்த ஆண்டினை தொடங்கியுள்ளன. ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் மட்டும் இதுவரை 7,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இதில், கூகுள் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. இந்த பணி நீக்கங்களின் பின்னணியில், செலவினத்தை குறைப்பது, […]

You May Like