சுவிட்சர்லாந்தில் கல்லூரி ஆல்பின் பியூ சோலைல் என்ற பள்ளியில் ஆண்டு கட்டணமாக ரூ.1.34 கோடி வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படிம் உலகின் மிக விலையுயர்ந்த பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்
கல்வி என்று வரும்போது, நம் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க ஒவ்வொரு பெற்றோர்களும் முயற்சித்து வருகின்றனர். அதன்படி, தங்கள் குழந்தைகள் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும், அதனால் அவர்கள் சரியான கல்வியைப் பெறவும், நல்ல சூழலில் விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்திவருகின்றனர். அதன்படி, உலகில் மிக விலையுயர்ந்த பள்ளிகள் பட்டியலில் மிகவும் விலையுயர்ந்த பள்ளியின் கட்டணம் 1.34 கோடி ரூபாயாகவும் மறுபுறம் மலிவான பள்ளியின் ஆண்டு கட்டணம் ரூ.77 லட்சம் என்பது ஆச்சரியமாக உள்ளதா?.
அதன்படி, சுவிட்சர்லாந்தில் கல்லூரி ஆல்பின் பியூ சோலைல் என்ற பள்ளி அமைந்துள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு வருடத்திற்கு ஒரு மாணவருக்கு CHf 150,000 ஆகும். அதாவது இப்பள்ளியின் ஓராண்டுக் கல்விச் செலவு இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.34 கோடி ஆகும்.
லு ரோசி நிறுவனம் என்ற இந்த பள்ளியும் சுவிட்சர்லாந்தில் உள்ளது. சுமார் 65 நாடுகளில் இருந்து 420-430 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியின் ஆண்டுக் கட்டணம் CHf 1,25,000, அதாவது 1.1 கோடி ரூபாய்.
ஹர்ட்வுட் ஹவுஸ் பள்ளி, சர்ரே, யுகே பள்ளி ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் சேர்க்கை நேர்க்காணல் மற்றும் குறிப்பு அடிப்படையில் நடைபெறுகிறது. இந்தப் பள்ளியின் ஆண்டுக் கட்டணம் GBP 25,284, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் ஆக உள்ளது. இதேபோல், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள குளோபல் பள்ளியின் ஆண்டுக் கட்டணம் USD 94,050, அதாவது தோராயமாக ரூ.77 லட்சம் ஆகும். இது ஒரு பயணப் பள்ளி மற்றும் இந்த பள்ளியின் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 4 நாடுகளில் வாழ்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.