fbpx

அரசு வேலை, பதவி உயர்வு கிடைக்க கடவுளை இப்படி வழிபடுங்கள்..!! இதை மட்டும் மறந்துறாதீங்க..!!

வேலை தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் எளிய பரிகாரங்கள், வழிபாட்டினை நம்பிக்கையுடன் செய்து வந்தாலே விரைவில் பிரச்சனைகள் தீரும். அப்படி வேலை தொடர்பான பிரச்சனைகள், தடைகள் நீங்க எந்த தெய்வத்தை எப்படி வணங்கினால் முழு பலனும் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

படிப்பை முடித்ததும் வேலை கிடைக்க வேண்டும். அடுத்தடுத்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது தான் அனைவருக்கும் இருக்கும் ஆசை, கனவாக இருக்கும். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை, படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை, மனதிற்கு பிடிக்காத வேலை, குறைந்த சம்பளம், வேலையில் பிரச்சனை, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கவில்லை, அரசு வேலை கிடைக்கவில்லை என சொல்லி புலம்புவர்கள் தான் அதிகம்.

இப்படி வேலை தொடர்பாக என்ன பிரச்சனை இருந்தாலும், அவர் வணங்க வேண்டிய தெய்வம் முருகப் பெருமான் தான். வேலை வேண்டுமானால் வேலனின் காலை பிடியுங்கள் என்பார்கள். முருகப் பெருமானை சில குறிப்பிட தலங்களுக்கு, குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரத்தில் வழிபடுவதன் மூலம் விரைவில் பலன் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பவர்கள் வியாழக்கிழமை அன்று திருச்செந்தூர் தலத்திற்கு சென்று, கடலில் நீராடி, முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும். பெளர்ணமி நாளில் திருச்செந்தூர் தலத்திற்கு சென்று, கடலில் புனித நீராடி, முருகப் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

பிறகு இரவு நேரத்தில் ஒரு மணி நேரமாவது நிலவு ஒளியில் கடற்கரையில் இருக்க வேண்டும். இப்படி வழிபட்டால் வேலை கிடைப்பதில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அதே போல் சம்பள உயர்வு, பதவி உயர்வு, மனதிற்கு பிடித்த வேலை அமைய வேண்டும் என்பவர்கள் பழனி முருகனை தரிசிக்கலாம். காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும். இந்த சமயத்தில் முருகப் பெருமான் வேடன் அலங்காரத்தில் இருப்பார். அந்த கோலத்தில் அவரை தரிசித்த பிறகு போகர் சன்னதியை வலம் வந்து வணங்கி, குறைந்தது ஒரு மணி நேரமாவது அங்கு அமர்ந்து, நமது பிரார்த்தனைகளை மனம் விட்டு முருகப் பெருமானிடம் சொல்லி விட்டு வர நல்ல மாற்றமும், பலனும் கிடைக்கும்.

திருச்செந்தூர், பழனி என கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே செவ்வாய் கிழமையில் காலை 6 மணி முதல் 7 மணிக்கும், முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன் 6 நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, நம்முடைய பிரார்த்தனையை சொல்லி வேண்டிக் கொண்ட வேண்டும். கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் சரி, வீட்டில் இருந்த படியே வழிபட்டாலும் சரி. முருகப் பெருமானை முழுமையாக நம்பி, சரணடைய வேண்டும். “எனக்கு இந்த பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடு. உன்னை தவிர எனக்கு உதவ யாரும் இல்லை. இந்த காரியத்தை எனக்கு வெற்றிகரமாக முடித்து தர வேண்டியது உன்னுடைய பொறுப்பு” என மொத்த பொறுப்பையும் முருகப் பெருமானிடம் ஒப்படைத்து விடுங்கள். அப்படி செய்யாமல் வெறும் விளக்கு மட்டும் ஏற்றி வைத்து விட்டு, நம்பிக்கை இல்லாமலும் எதிர்மறை சிந்தனைகளுடன் இருந்தாலும் அதில் எந்த பலனும் கிடையாது.

Read More : படுத்துக் கொண்டே இந்த விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க..!! ஏகப்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் வருமாம்..!!

Chella

Next Post

ஆண்களே..!! இந்த உணவை நோட் பண்ணிக்கோங்க..!! எல்லா விஷயத்துக்கும் இது போதும்..!!

Wed Sep 25 , 2024
If we want to have good health and vitality even after the age of 30, we need to pay more attention to vitamins.

You May Like