திருமணத்திற்கு ஹெலிகாப்டரை புக் பண்ண என்ன செய்ய வேண்டும்? அதற்கான வாடகை குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இப்போதெல்லாம் பெரும்பாலானோர் தங்கள் திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற விரும்புகின்றனர். திருமணம் நடைபெறும் இடம் முதல் உணவு வரை ஒவ்வொருவரும் வித்தியாசமாக ஏதாவது செய்ய ஆசைப்படுகின்றனர். திருமணத்திற்கு ராயல் லுக் கொடுக்க, மணப்பெண்ணை ஹெலிகாப்டரில் அழைத்து வரும் நிகழ்வு தற்போது அதிகரித்துள்ளது.
நீங்களும் உங்கள் துணைக்கு ஏதாவது செய்ய விரும்பினால், திருமணத்திற்கு ஹெலிகாப்டரை முன்பதிவு செய்யலாம். ஹெலிகாப்டரை முன்பதிவு செய்வது கடினமான காரியம் அல்ல. மற்ற வாகனங்களைப் போல இதையும் முன்பதிவு செய்யலாம். ஒரே வித்தியாசம் என்னவென்றால் செலவு கொஞ்சம் அதிகம். மேலும், இது பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் மணமக்கள் அல்லது ஹெலிகாப்டரை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
பல நிறுவனங்கள் திருமணங்களுக்கு ஹெலிகாப்டர்களை வழங்குகின்றன. ஆன்லைனில், ஆஃப்லைனில் கூட பதிவு செய்யலாம். திருமணத்திற்கு ஒரு ஹெலிகாப்டரை முன்பதிவு செய்து டிராவல் ஏஜென்சியை தொடர்பு கொள்ள வேண்டும். இன்றைக்கு ஆன்லைனில் அதிகளவில் முன்பதிவு செய்யப்படுகிறது.
எவ்வளவு செலவாகும்..?
ஹெலிகாப்டர் கட்டணம் பல விஷயங்களைப் பொறுத்து மாறுபடும். தூரம், ஹெலிகாப்டரின் வகை மற்றும் சீசன் ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசப்படும். வழக்கமாக, ஹெலிகாப்டர் முன்பதிவுக்கான விலை மணிக்கணக்கில் முடிவு செய்யப்படும். சில நிறுவனங்கள் மொத்த தொகையையும் எடுத்துக்கொள்கின்றன. தூரம் அதிகமாக இருந்தால் அதிக கட்டணம் வசூல் செய்யப்படும். பொதுவாக ஒரு ஹெலிகாப்டர் குறைந்தது 2 மணி நேரத்துக்கு முன்பதிவு செய்யப்படும்.
இதுகுறித்து பத்ரி ஹெலிகாப்டர்ஸின் பிரவீன் ஜெயின் கூறுகையில், திருமணத்திற்கு ஹெலிகாப்டரை முன்பதிவு செய்வது தூரம் மற்றும் இருக்கை திறனைப் பொறுத்தது. டெல்லி-என்சிஆர் மற்றும் ஹரியானாவிற்கு 5 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு தற்போது ரூ. 4.50 லட்சத்தை தனது நிறுவனம் வசூலிக்கிறது என்று கூறுகிறார். உத்தரப்பிரதேசம், லக்னோவில் ரூ.6 லட்சம் மற்றும் பனாரஸுக்கு ரூ.9 லட்சம் கட்டணம். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தருக்கு ரூ.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஹெலிகாப்டர்
பெரும்பாலான மக்கள் திருமணங்களில் ஹெலிகாப்டர் சேவையை எடுத்துச் செல்வது மணப்பெண்ணை மாமியார் வீட்டிற்கு பிரியாவிடை செய்வதற்காக மட்டுமே. இதில், ஹெலிகாப்டர் 2 மணி நேரம் பயன்படுத்தப்படுவது வழக்கம். அதற்கும் மேல் பயன்படுத்தால் செலவு இன்னும் அதிகரிக்கும். சென்னையை பொருத்தளவில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1.50 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை ஹெலிகாப்டர்கள் வாடகையாக வசூலிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.