fbpx

” என்னுடன் ரொமான்ஸ் செய்வீங்களா..” வாட்ஸ்அப்-ல் வந்த செய்தி.. ரூ.1.5 லட்சத்தை இழந்த இளைஞர்..

ஆக்ராவைச் சேர்ந்த பூஜா என்ற இளம் பெண்ணிடம் இருந்து வாட்ஸ்அப் செய்தியைப் பெற்ற 22 வயது இளைஞன் ரூ. 1.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள லக்ஷ்மி நகரில் வசிப்பவர் 22 வயதான நவேத் கான். இந்நிலையில் அவர் தன்னை ஒரு இளம்பெண் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் “ எனது மொபைல் போனில் வாட்ஸ்அப் செய்தி வந்தது, அதில், “என்னுடன் ரொமான்ஸ் செய்வீர்களா? (Will you romance with me?) ஆம்/இல்லை என்று பதிலளிக்கவும் என்று குறிப்பிட்டிருந்தது. “ஆம்” என்று பதிலளித்த சில வினாடிகளில், எனக்கு பூஜா என்ற இளம் பெண்ணிடமிருந்து வீடியோ கால் வந்தது.

வீடியோ காலில் பூஜா தான் ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்தார்.. மேலும் எனது ஆடைகளையும் கழற்ற சொன்னார். நான் எனது ஆடைகளை முழுமையாக அவிழ்க்கவில்லை.. ஆனால் அதை பூஜா ரெக்கார்டு செய்து கொண்டார்.. பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக எனக்கு வாட்ஸ்அப் செய்தி வந்தது.. பயத்தின் காரணமாக வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு எனது அனைத்து சமூக வலைதள கணக்குகளையும் நீக்கிவிட்டேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “ மறுநாள், டெல்லி காவல்துறையின் சைபர் செல் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திய ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் மீது தனக்கு புகார் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் போலீசார் வாரண்ட் பிறப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். அவர் என்னை வீடியோ கால் செய்யுமாறு கூறினார்.. அதற்காக நான் வாட்ஸ்அப்பை மீண்டும் நிறுவி அவருடன் பேசினேன். எனது வீடியோவை நீக்குவதற்கு உதவும், மோனு பாஞ்சால் என்ற நபரை தொடர்பு கொள்ளுமாறு அவர் கூறினார்…

நான் பாஞ்சாலை அழைத்தபோது, அவர் 21,800 ரூபாய் கேட்டார். பணம் பின்னர் திருப்பி தரப்படும் என்றும் உறுதியளித்தார். ஜதின் குக்ரேஜா பெயரில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் கணக்கு எண்ணை அவர் என்னிடம் கொடுத்தார். நான் பணத்தை மாற்றினேன்.. ஆனால் இன்னும் மூன்று வீடியோக்கள் நீக்கப்பட வேண்டியிருந்ததால், அதே தொகையை மூன்று முறை டெபாசிட் செய்யும்படி சொன்னார்.. மொத்தம் ரூ.64,500 பணத்தை அனுப்பினேன். ராம்கோபால் பெயரில் இருந்த ஹெச்டிஎஃப்சி வங்கியின் மற்றொரு கணக்கு எனக்கு வழங்கப்பட்டது.. சிறிது நேரம் கழித்து, மீண்டும் பாஞ்சாலிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.. அவர் எனது வழக்கைச் செயல்படுத்த சைபர் செல் அதிகாரிக்கு மின்னஞ்சல் எழுதியிருப்பதாகவும், அவருடன் பேச வேண்டும் என்றும் கூறினார்.

நான் சைபர் செல் அதிகாரியை அழைத்தபோது, அவர் மேலும் 1.5 லட்சம் ரூபாய் கேட்டார். என் வேண்டுகோளின் பேரில், அவர் தொகையை குறைத்தார்.. பின்னர் நான் பணத்தை கொடுத்தேன். ஆனால் அவர் அதிக பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். ” என்று குறிப்பிட்டுள்ளார்..

இதுகுறித்து சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை காட்டி அப்பாவி மக்களை கவர்ந்திழுப்பது சைபர் குற்றவாளிகளின் பொதுவான செயல்பாடாக மாறியுள்ளது என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

Maha

Next Post

வேகமாக பரவும் கொரோனா.. 4வது டோஸ் தடுப்பூசி தேவையா..? நிபுணர்கள் விளக்கம்..

Sat Apr 1 , 2023
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.., ஒமிக்ரானின் XXB.1.16, என்ற துணை வகை காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது..தொடர்ந்து 3 நாட்களாக, நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது. கொரோனா அதிகரிப்புக்கு மத்தியில், தடுப்பூசிகள் பாதுகாப்பை அளிக்குமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.. கேரளாவில் உள்ள கோவிட் பணிக்குழுவின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் இதுகுறித்து பேசிய போது “இந்தியாவில் கொரோனாவுக்கு […]

You May Like