கணினியில் வாட்ஸ் ஆப் வெப் மூலம் வீடியோ கால் பேசலாம் என்றும் மேலும் வாய்ஸ் காலில் 32 நபர்கள் வரை ஒரே நேரத்தில் அழைப்பில் இணைந்திருக்க முடியும் என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூக வலைதளங்களான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், ஷேர்சாட் உள்ளிட்டவைகளின் பயன்பாடு அனைவரது மத்தியிலும் பெரும் மைல்கல்லாக உள்ளது. இதில் அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் சமூகவலைதளமாக வாட்ஸ் அப் உள்ளது. இதனால், பல்வேறு புதிய அம்சங்களை அவ்வப்போது வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்ஸ் நோட்டை ஸ்டேட்டசாக வைக்க முடியும் என்ற புதிய அப்டேட்டை அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், கணினி மற்றும் லேப்டாப்பில் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்தும் போதும் இனிமேல் வீடியோ கால் செய்யலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது வாட்ஸ் ஆப் வெப் மூலம் கணினியில் இணைத்திருக்கும் பொழுதும், இனிமேல் வீடியோ கால் செய்யலாம். இதில் நபர்கள் வரை குழு வீடியோ கால் பேசமுடியும். வாய்ஸ் காலில் 32 நபர்கள் வரை ஒரே நேரத்தில் அழைப்பில் இணைந்திருக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.