fbpx

Wow!. அந்த நீல வட்டம்!. வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் `மெட்டா ஏஐ’ இந்தியாவில் அறிமுகம்!. பயன்கள் இதோ!

’Meta AI’: உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவி சேவைகளில் ஒன்றான ‘மெட்டா ஏஐ’ தொழில்நுட்பத்தை இப்போது வாட்ஸ்-ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜா் ஆகியவற்றில் மெட்டா ஏஐ வலைபக்கம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே, தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடுவதற்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி ஆழமாக அறிவதற்கும் மெட்டா ஏஐ சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மெட்டா ஏஐ’ சேவையானது அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு ‘கனெக்ட்’ நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ‘மெட்டா ஏஐ’ சேவையின் சமீபத்திய பதிப்பு உலகம் முழுவதும் உள்ள பயனா்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியாவில் இப்போது அச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு இடையே பயனா்கள் ‘மெட்டா ஏஐ’ சேவையை அணுகலாம். உதாரணமாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத்தில் உங்களுக்கு விருப்பமான ஒரு பதிவைப் பாா்க்கிறீா்கள் என்றால், அதே செயலியில் இருந்துகொண்டு அந்த பதிவு குறித்த மேலும் பல தகவல்களை ‘மெட்டா ஏஐ’ சேவையிடம் கேட்டுப் பெறலாம்.

Readmore: இதெல்லாம் நமக்கு சரியா வராது!. கழட்டிவிட்ட விஜய்!. இலை பக்கம் சாய்ந்த சீமான்!. கூட்டணி கனவு பலிக்குமா?

English Summary

`Meta AI” launched in India on WhatsApp, Facebook, and Instagram! Here are the benefits!

Kokila

Next Post

செக்...! சிம் கார்டுக்கு வந்த புதிய ரூல்ஸ்... சிக்கினால் 3 ஆண்டு சிறை + ரூ.2 லட்சம் அபராதம்...!

Sat Jun 29 , 2024
New rules for SIM card... 3 years imprisonment + Rs.2 fine if caught

You May Like