WPL 2025: மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
கடந்த 11ம் தேதி மும்பையில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியபிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தநிலையில், இந்த தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளான யாஷிகா பாட்டியா – ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். யாஷிகா பாட்டியா 15 ரன்களில் அவுட்டாகி வெளியே, அடுத்து வந்த நாட் ஷிவர் பிரண்ட் ஹேலி மேத்யூஸுடன் ஜோடி சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி, ஹேலி மேத்யூஸ் 77 ரன்களும், நாட் ஷிவர் 77 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, பெத் முனி 5 பந்துகளில் 6 ரன்கள், தானி கிளப்சன் 24 பந்துகளில் 34 ரன்கள், ஹர்லீன் 9 பந்துகளில் 8 ரன்கள், ஆஷ் கார்ட்னர் 4 பந்துகளில் 8 ரன்கள், பூபே லெட்சிபைடு 20 பந்துகளில் 31 ரன்கள், பார்தி 20 பந்துகளில் 30 ரன்கள் கஷ்வீ 6 பந்துகளில் 4 ரன்கள், சிம்ரன் 8 பந்துகளில் 17 ரன்கள், தனுஜா 12 பந்துகளில் 18 ரன்கள் அடித்து இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 19.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் மும்பை அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம், இறுதிப்போட்டிக்குள் மும்பை அணி நுழைந்துள்ளது. இதன்படி, நாளை ( மார்ச் 14) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.