fbpx

WPL 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடு!. ஹர்மன்ப்ரீத் கவுரின் மும்பை முதல் மந்தனாவின் ஆர்சிபி வரை!. முழு விவரம் இதோ!.

WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான 3வது சீசன் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

ஐபிஎல்லை போன்றே கிரிக்கெட் ரசிகர்களின் பெருமித்த வரவேற்பை பெண்கள் ஐபிஎல் என கூறப்படும் மகளிர் பிரீமியர் லீக்கும் பெற்றுள்ளது. முதலிரண்டு சீசன்களில் முதல் சீசனை ஹர்மன்ப்ரீத் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனை ஸ்மிரிதி மந்தனா தலைமையில் ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர். இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஐபிஎல் ஏலம் கடந்த டிசம்பர் 15ம் தேதி பெங்களூரில் நடைபெற்றது. 19 இடங்களுக்கான WPL மினி ஏலத்தில் மொத்தமாக 120 வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் 91 இந்திய வீராங்கனைகளும், 29 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்கும். மொத்தமான 19 இடங்களில் 5 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற மினி ஏலத்தில் 5 வீராங்கனைகள் அதிகதொகைக்கு ஏலம் சென்று அசத்தியுள்ளனர். அதன்படி, மும்பையை சேர்ந்த அன்கேப்டு இந்திய வீராங்கனையான சிம்ரன் ஷைக் ரூ.1.90 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான 33 வயது டியான்ட்ரா டாட்டின் 50 லட்சம் அடிப்படை விலையிலிருந்து 1.70 கோடிக்கு குஜராத் ஜியண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அன்கேப்டு இந்திய வீராங்கனையும், தமிழகத்தைசேர்ந்த 16 வயதான விக்கெட் கீப்பர் வீராங்கனையுமான ஜி கமலினி அடிப்படை விலையான 10 லட்சத்துக்கு வந்து 1.60 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார். உத்தரகாண்ட்டை சேர்ந்த இந்திய ஆல்ரவுண்டர் வீரரான பிரேமா ராவத்தை ரூ.1.20 கோடிக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான நல்லபுரெட்டி சரணி டெல்லி கேபிடல்ஸ் அணியால் 55 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், பெண்கள் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான 3வது சீசன் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. போட்டிகள் 4 இடங்களில் நடத்தப்படவுள்ளது. அதே நேரத்தில், இந்த போட்டியின் இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் வரும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற, பெங்களூர் அணி குஜராத் அணியுடன் மோதுகிறது. இதில் வாதரோ, லக்னோ, மும்பை மற்றும் பெங்களூருவில் போட்டிகள் நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பிப்ரவரி 14-ந் தேதி தொடங்கி மார்ச் 15-ந் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதும். மார்ச் 11-ந் தேதியுடன் லீக் சுற்றுக்கள் முடிவடையும் நிலையில், மார்ச் 3-ந் தேதி எலிமினேட்டர் சுற்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டி மார்ச் 15-ந் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சபினேனி மேக்னா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), எலிஸ் பெர்ரி, ஜார்ஜியா வேர்ஹாம், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, சோஃபி டிவைன், ரேணுகா சிங், சோஃபி மோலினியூக்ஸ், ஏக்தா சுஜா பிஸ்ட், கேட் சுஜா பிஸ்ட், கேட் சுஜா பிஸ்ட் வியாட், பிரேமா ராவத், விஜே ஜோஷிதா, ரக்வி பிஷ்ட் மற்றும் ஜாகர்வி .

மும்பை இந்தியன்ஸ்: அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், சோலி ட்ரையோன், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஹெய்லி மேத்யூஸ், ஜின்டிமணி கலிதா, நடாலி ஸ்கீவர், பூஜா வஸ்த்ரகர், சைகா இஷாக், யாஸ்திகா பாட்டியா, ஷப்னிம் இஸ்மாயில், அமந்தீப் கவுர், எஸ். சஜ்னா, கீர்த்தனா, நாடின் டி கிளர்க், ஜி கமலினி, சமஸ்கிருதி குப்தா மற்றும் அக்ஷிதா மகேஸ்வரி.

டெல்லி: ஆலிஸ் கேப்ஸி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், மரிசானே கப், மெக் லானிங் (கேப்டன்), மின்னு மணி, ராதா யாதவ், ஷபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தானியா பாட்டியா, டைட்டாஸ் சாது, அனாபெல் சுதர்லான்ட் , என். சரணி, சாரா பிரைஸ் மற்றும் நிகி பிரசாத்.

குஜராத் ஜயண்ட்ஸ்: ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி, தயாளன் ஹேம்லதா, ஹர்லீன் தியோல், லாரா வால்வார்ட், ஷப்னம் ஷகீல், தனுஜா கன்வர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், மேக்னா சிங், காஷ்வி கவுதம், பிரியா மிஸ்ரா, மன்னத் காஷ்யப், பார்தி ஃபுல்மாலி, சிம்மத்ரன் சத்ராக், சயாலித்ராத் ஷத்ரக் , டேனியல் கிப்சன், வெளியீட்டாளர் நைக்.

யுபி வாரியர்ஸ்- அலிசா ஹீலி (கேப்டன்), அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே, ராஜேஸ்வரி கெய்க்வாட், ஸ்வேதா செஹ்ராவத், சோஃபி எக்லெஸ்டோன், தஹ்லியா மெக்ராத், விருந்தா தினேஷ், சைமா தாகூர், பூனம் ச்ஹர்மஹெம்னா, சாத்ரி கெம்னா, சாத்ரி கெம்னா, , ஆருஷி கோயல், கிராந்தி கவுர், அலனா கிங்.

Readmore: ‘ட்விட்டரை வாங்கியதில் மோசடி’?. அமெரிக்க பங்குச்சந்தையை ஏமாற்றியுள்ளார்’!. எலான் மஸ்க் மீது வழக்கு!.

English Summary

WPL 2025 schedule released! From Harmanpreet Kaur’s Mumbai to Mandhana’s RCB!. Here are the full details!.

Kokila

Next Post

வாஸ்து தோஷத்தை நீக்கும் துடைப்பம்.. தவறுதலாக கூட இந்த திசையில் வைக்காதீங்க.. வறுமை ஏற்படும்..

Fri Jan 17 , 2025
By placing the broom in the right place, you can increase luck, money, and receive the blessings of Goddess Lakshmi.

You May Like