1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக Yahoo நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் ஜூம் நிறுவனம் 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது..
இந்நிலையில் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக இண்டர்நெட் நிறுவனமான Yahoo இன்று அறிவித்துள்ளது.. தனது பணியாளர்களில் 20 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், அதில். 12 சதவீத பணியாளர்கள் (சுமார் 1,000 ஊழியர்கள்) இன்று பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது… அடுத்த 6 மாதங்களில், மேலும் 8 சதவீதம் பேர் (600 பேர்) பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்ப வணிகத்தில் பாதியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது..
Yahoo நிறுவனத்தின் CEO ஜிம் லான்சோன் இதுகுறித்து பேசிய போது “ இந்த மாற்றங்கள் ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் லாபத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார். மேலும் இதன் மூலம் இலாபகரமான வணிகங்களில் அதிக முதலீடு செய்ய நிறுவனத்திற்கு உதவும் என்றும் தெரிவித்தார்..
அதிக பணியமர்த்தல், நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட வலுவான பின்னடைவு ஆகியவை காரணமாக வேலைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் Yahoo நிறுவனமும் இணைந்துள்ளது. முன்னதாக செலவைக் குறைக்க 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக டிஸ்னி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.