மும்பை அணியில் இருந்து விலகிய ஜெய்ஸ்வால் தன்னை தேடி வந்த கேப்டன் பதவியை எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 23. உ.பி.,யை சேர்ந்த இவர், 2018 முதல் உள்ளூர் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ரஞ்சி தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்கி வந்தார். இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாற்றுவதற்கு மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழை ஜெய்ஸ்வால் கோரியுள்ளார். இதையடுத்து, அடுத்த ரஞ்சி சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட ஜெய்ஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தன்னை தேடி வந்த கேப்டன் பதவியை எடுத்துக்கொண்டதாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இந்த முடிவை எடுப்பது சவாலாக இருந்ததாகவும், தன்னுடைய இன்றைய நிலைக்கு மும்பை அணி தான் காரணம் எனவும், அதற்காக வாழ் நாள் முழுவதும் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கோவா அணி தனக்கு தலைமைப் பொறுப்பை எவ்வாறு வழங்கியுள்ளது என்பதை விரிவாகக் கூறிய அவர், “கோவா எனக்கு தலைமைப் பொறுப்பை வழங்கியுள்ளது. எனது முதல் குறிக்கோள் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடுவது. நான் தேசியப் பணியில் இல்லாத போதெல்லாம், நான் கோவாவுக்காக விளையாடுவேன்.. இது எனக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். அதனால் அந்த பொறுப்பை நான் அதை எடுத்துக் கொண்டேன்.” என தெரிவித்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் இருந்து ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். சில சீசன்களுக்கு முன்பு விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணிக்காக இரட்டை சதம் அடித்து அசத்தினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் தன்னை தொடக்க வீரராக களமிறங்க உதவியது.
2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜெய்ஸ்வால், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 43.44 சராசரியுடன் 391 ரன்கள் எடுத்து ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் உட்பட எடுத்து கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: மியான்மர் உள்நாட்டு போர் தற்காலிகமாக நிறுத்தம்.. இறப்பு எண்ணிக்கை 3,000 ஆக உயர்வு..!!