fbpx

யோகி பாபு பட ப்ரோமோஷனுக்கு வந்த இயக்குனர் மாரடைப்பால் மரணம்…!

யோகிபாபு மற்றும் செந்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ திரைப்படத்தின் இயக்குனர், அந்தப்பட ப்ரோமோஷனுக்கு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நடிகர் கார்த்தி மற்றும் சந்தானம் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த படம் சகுனி இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இந்த படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இன்றும் ரசிக்கக்கூடிய படங்களில் ஒன்றாக இருக்கிறது.

இயக்குனர் ஷங்கர் தயாள் சகுனி படத்தை அடுத்து, 2016-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் “வீர தீர சூரன்” என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதனையடுத்து தற்போது யோகி பாபு நடிப்பில் “குழந்தைகள் முன்னேற்ற கழகம்” என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க இயக்குனர் சங்கர் தயாள் வந்திருந்தார்.

அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக சங்கர் தயாள் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சங்கர் தயாள் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சங்கர் தயாள் இயக்கியுள்ள ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ திரைப்படத்தில், நடிகர் யோகி பாபு மற்றும் செந்தில் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் காமெடி படமாகஉருவாகியுள்ள இந்த படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆக இருந்தது.

படத்தின் இயக்குனர் பட ப்ரோமோஷனுக்கு வந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More: “புடவையை தூக்கி கட்டும்மா… பார்க்க கஷ்டமா இருக்கு” தொகுப்பாளினிக்கு பிரபல நடிகர் கொடுத்த அட்வைஸ்..

English Summary

Yogi Babu film promotion director died of heart attack…!

Kathir

Next Post

வெளிநாடுகளில் தீவிர ஆய்வு.. அந்த அளவிற்கு முருங்கைக்கீரையில் என்ன இருக்கு தெரியுமா..?

Fri Dec 20 , 2024
health benefits of moringa leaves

You May Like