fbpx

’என் புருஷனை விட நீ தான் முக்கியம்’..!! கணவரை தீர்த்துக் கட்ட பக்கா ஸ்கெட்ச்..!! துணை நடிகை செய்த காரியம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே டி. நல்லகவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையே, கடந்த சில மாதங்கள் முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரம்யா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருந்ததால், கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் என்கிற சந்திரசேகர் என்பவருடன் ரம்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் சீரியல் நாடகங்களில் ரம்யா துணை நடிகையாக நடித்து வருகிறார். இதற்கிடையே, ரமேஷ் 2 குழந்தைகளை பராமரிக்க முடியாமல் ரம்யாவிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, ரம்யா சில தினங்கள் முன்பு பொள்ளாச்சியில் உள்ள ரமேஷ் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்நிலையில், ரம்யா தனது நண்பர் டேனியல் என்கிற சந்திரசேகரனிடம் தன் கணவர் குடித்து விட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவரை கொலை செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவத்தன்று இரவு ரம்யாவும், ரமேஷும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். அப்போது அந்த நபர் மறைத்து வைத்திருந்த ஆக்ஸாபிலைட் மூலம் ரமேஷை கை, கழுத்து, தலை பகுதிகளில் தாக்கி விட்டு தப்பித்து விட்டார். இதையடுத்து ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரமேஷ் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து ரம்யாவிடம் விசாரித்த போது, அவர் மீது சந்தேகம் எழுந்ததால் அவரது மொபைல் போனில் வந்த அழைப்புகள் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது கணவரை கொல்ல நண்பர் மூலம் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து ரம்யா மற்றும் சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். துணை நடிகை கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

’என் புள்ளையோட வாழ்க்கையே போச்சு சார்’..!! பிளஸ்2 மாணவியை பலாத்காரம் செய்த ஆயுதப்படை காவலர்..!!

Sun Mar 26 , 2023
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (30) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது தலைவாசல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் பெற்றோர், ஆத்தூர் அனைத்து மகளிர் காவ்ல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ”எங்களது மகள் தலைவாசல் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறாள். இந்நிலையில், ஆயுதப்படை காவலரான பிரபாகரன் என்பவர் எங்களது மகளிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதில், […]

You May Like