fbpx

’அவன விட நீ தான் எனக்கு முக்கியம்’..!! காதல் கணவனை கழட்டிவிட்டு இன்ஸ்டா காதலனுடன் ஓடிப்போன பெண்..!!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். நித்யா கோம்பைபுதூரில் உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். இந்நிலையில் நித்யா அதிக நேரம் செல்போனில் பொழுதைக் கழித்ததாக கூறப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராமில் நவீன் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் புஷ்பராஜுக்கு தெரியவரவே, நித்யாவை அவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக திடீரென நித்யாவை காணவில்லை. இதனால், சந்தேகமடைந்த காதல் கணவர் புஷ்பராஜ் இன்ஸ்டாகிராம் காதலன் நவீனுடன் சென்றிருக்கலாம் என திருச்சி துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓடிய அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியை நித்யாவை தொலைபேசி எண்ணைக் கொண்டு தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பள்ளி ஆசிரியை இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

"அந்த மனசு தான் சார் கடவுள்" பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் எனக்கு இந்த வசதிகள் வேண்டாம் -முதல்வர்

Mon May 22 , 2023
கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடம், தனது வாகனப் போக்குவரத்திற்காக அமல்படுத்தப்பட்ட ‘ஜீரோ ட்ராஃபிக்’ நெறிமுறையைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பதிவிட்டிருந்த முதல்வர் சித்தராமையா, தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது வாகனப் போக்குவரத்துக்கான ‘ஜீரோ டிராஃபிக்’ நெறிமுறையை திரும்பப் பெறுமாறு பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டேன். ‘ஜீரோ டிராஃபிக்’ காரணமாக கட்டுப்பாடுகள் உள்ள பாதையில் பயணிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் […]

You May Like