fbpx

கள்ளக்காதலுக்காக இப்படி இறங்கிட்டாங்களே..!! நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..!! கம்பி எண்ணும் காதலியின் பின்னணி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா என்ற பெண்ணை ராஜா காதலித்து வந்துள்ளார். பின்னர், அவர்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரனிஷ் என்ற ஒரு வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் தீபிகாவுக்கும், அவரது கணவரின் நண்பருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால், அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு அவரது கணவரும், குழந்தையும் தடையாக இருந்து வந்துள்ளனர். இதனால் கணவரையும், குழந்தையையும் கொலை செய்த தீபிகா முடிவு செய்தார். அதன்படி, கடந்த 13.5.2019 அன்று இரவு தீபிகா தனது கணவர் ராஜா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தார்.

பின்னர், இரக்கமின்றி தனது ஒரு வயது குழந்தையையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இதையடுத்து, ஏரியின் அருகே குழி தோண்டி இருவரின் உடல்களையும் புதைத்துள்ளார் தீபிகா. இதற்கு தீபிகாவின் கள்ளக்காதலனுடம் உடந்தையாக செயல்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவரது கள்ளக்காதலன் விடுவிக்கப்பட்டார்.

Read More : விஜயகாந்த் திரைப்பட பாணியில் ஊசி மூலம் உடலில் காற்றை ஏற்றி கொலை..!! காவலுக்கு காத்திருந்த மாமியார், மருமகள்..!!

English Summary

A friendship developed between her and her husband’s friend, which eventually turned into love.

Chella

Next Post

மழை காலம் வந்தாச்சு.. உங்கள் கார்களை முறையாக பாதுகாப்பது எப்படி? - Expert தரும் டிப்ஸ் இதோ..

Fri Nov 22 , 2024
How to keep vehicles like cars and bikes safe during rainy season? Let's take a detailed look at the tips given by the mechanic on what to do when the silencer gets water.

You May Like