fbpx

தொலைதூர பட்ட படிப்புகளுக்கு ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் தொடங்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல், வணிகம், இதழியல் மற்றும் மக்கள்தொடர்பு, சட்டம், கல்வி, மேலாண்மை, சமூக அறிவியல், தொழில்சார் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம்.

எஸ்சி, எஸ்டி பிரிவைசேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு குறிப்பிட்ட இளங்கலை படிப்புகளில் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். இக்னோ பல்வேறு ஆன்லைன் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இதில் சேர https://ignouiop.samarth.edu.in , http://https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

English Summary

You can apply for distance degree courses till 30th June

Vignesh

Next Post

PM Kissan!. வரும் 18ம் தேதி பணம் டெபாசிட்!. விவசாயிகள் பட்டியலில் பெயரை எவ்வாறு சரிபார்க்கலாம்!

Fri Jun 14 , 2024
PM Kissan! Deposit the money on the 18th! How to Check Name in Farmers List!

You May Like