தேசிய வருவாய் வழி உதவித்தொகை திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
2022- 2023-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத்திட்டத் தேர்வு (NMMS) 25.02.2023 சனிக்கிழமை, அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 20.01.2023 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் https://dgel.tn.gov.in எனும் இணையதள முகவரி மூலமாக இன்று பிற்பகல் 12.00 முதல் 25.01.2023 மாலை 06.00 மணி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EIMS-ன் அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD- ஐ பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினை பதிவு செய்தவுடன் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும். அவ்விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும்.
முதன்முறையாக இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் புதிய பள்ளிகள், இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு செய்த பின் புதிய USER ID, PASSWORD- ஐ பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் .