fbpx

TET: அக்.20 முதல் நவம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…! ஆசிரியர் தேர்வு வாரியம் சூப்பர் அறிவிப்பு…!

தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்களுக்கிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு 2023 2024 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

TRIUMPHS தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக ( Full Time Ph.D Programme ) நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இதன் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( https://trb.tn.gov.in/ ) மேற்படி அறிவிக்கை 16.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 20.10.2023 முதல் 15.11.2023 பிற்பகல் 5.00 மணிவரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் அக்டோபர் 22 மற்றும் 29 தேதிகளில் ஆர்எஸ்எஸ் பேரணி…! அனுமதி அளித்தது உயர்நீதிமன்றம்…!

Tue Oct 17 , 2023
விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில், அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்தாண்டு பேரணிக்கு அரசு சார்பில் அனுமதி மறுத்ததை அடுத்து உயர் நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் சென்று பேரணி நடத்த அனுமதி வாங்கியது ஆர்எஸ்எஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் […]

You May Like