fbpx

ரூ.300 தள்ளுபடியில் சிலிண்டர் வாங்கலாம்!… எப்படி தெரியுமா?… வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறம் பெட்ரோல், டீசலுக்கு போட்டியாக கேஸ் சிலிண்டர் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இருப்பினும், கடந்த சில மாதங்களில் சமையல் சிலிண்டர் விலை கணிசமாகக் குறைந்துள்ளது என்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த விலைக்கு சிலிண்டர்களை வாங்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழி உள்ளது. அதன் மூலம் நீங்கள் 300 ரூபாய் தள்ளுபடியில் சிலிண்டர் வாங்கலாம்.

குறைந்த விலைக்கு சிலிண்டர் வாங்குவது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மைதான். சிலிண்டர்களின் விலை நகரத்திற்கு நகரம் மாறுபடும். எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 940 வரை இருக்கிறது. ஆனால் நீங்கள் 300 ரூபாய் குறைவாக சிலிண்டர் வாங்க முடியும். தற்போது, ​​எல்பிஜி சிலிண்டர் விலை குறைந்து வருவதால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டது. இதுதவிர தனி மானியமாக 100 ரூபாய் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதன்படி தற்போது ரூ.300 மானியம் வழங்கும் பணி நடந்து வருகிறது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

300 ரூபாய் மானியம் போக நீங்கள் வெறும் 640 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம். எனவே, இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிடாமல் குறைந்த விலைக்கு சிலிண்டர் வாங்கிப் பயன்படுத்தலாம். விரைவில் தேர்தல் வரவிருப்பதால் மானியத் தொகை மேலும் உயர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளது.

Kokila

Next Post

உத்தராகண்ட் சுரங்கப் பாதை: கம்பிகளை அகற்றும் பணிகளால் தாமதம்…! தயார் நிலையில் மருத்துவர் குழு…

Thu Nov 23 , 2023
உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதை கட்டுமான பணியின்போது சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து, சில்க்யாரா பக்கத்தில் 60 மீட்டர் நீளத்தை குப்பைகளால் தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக, சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 11 நாட்களை கடந்த […]

You May Like