fbpx

சொர்க்கத்திலும் மனை வாங்கலாம்!. ஒரு சதுரடி ரூ.8,000 தான்!. ஜிபே மூலம் பணம் அனுப்பலாம்!. விசித்திர தேவாலயம்!

Heaven land: மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது. அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் – வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Readmore: என்னுடைய பிறந்தநாள் பரிசு!. எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சி!. டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து!

English Summary

You can buy land in heaven! A square foot is only Rs. 8,000! You can send money through ZPay! A strange church!

Kokila

Next Post

இந்த பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காதீர்கள்.. தரித்திரம் தாண்டவம் ஆடும்!

Sun Jun 30 , 2024
Ancestors have said that we should not give certain things in our house when someone asks at night, and if we do so, the wealth in our house will go away with it.

You May Like