fbpx

Online-ல் தவறாக பணம் செலுத்தி விட்டீர்களா…? உடனே இதை செய்தால் உங்க பணம் திரும்ப பெறலாம்…!

இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்துள்ளன. சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை பரிவர்த்தனை பெரும்பாலும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்கு செல்லக்கூடும். அல்லது நீங்கள் வேற யாராவது ஒருவருக்கு மாற்றி அனுப்பக்கூடும்.

அது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம், ஆனால் அதற்கு பல்வேறு வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். தவறான பயனாளியிடம் சென்ற பணம் கணக்கில் தவறான பரிவர்த்தனை நடந்திருப்பதை சம்பந்தப்பட்ட நபர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அப்படி பட்ட சூழலில் உடனே நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் செய்ய வேண்டும். அல்லது உங்கள் வங்கியின் ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகாரைப் பதிவு செய்யலாம்.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் NPCI இன் இணையத்தில் சென்று What we do என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதில் அனைத்து UPI பெயர்களும் வரிசையாக பட்டியலிடப் பட்டிருக்கும். அதில் நீங்கள் பயன்படுத்திய கணக்கை விவரத்தை செய்தால் Dispute Redressal Mechanism என்று வரும், அதனுள் செல்ல வேண்டும். இதற்கு நீங்கள் https://www.npci.org.in/what-we-do/upi/dispute-redressal-mechanism ஐயும் கிளிக் செய்யலாம்.

அதேபோல நீங்கள் RBI வழிகாட்டுதல்களின்படி, தவறுதலாக வேறொரு நபருக்கு பணம் செலுத்தி இருந்தால் bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்திற்கு சென்று புகார் செய்யலாம்.

Vignesh

Next Post

தாயை பிரச்சாரத்தின் போது சந்தித்திருக்கலாமே... அது ஏன் தேர்தல் அன்று சந்தித்தார்..? திருமாவளவன் கேள்வி...

Tue Dec 6 , 2022
குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று நடைபெற்றுது. நேற்றை தினம் பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டோர் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில் நேற்றைய தினம் முன்னதாக, காந்திநகரில் உள்ள இல்லத்துக்கு […]

You May Like