fbpx

வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ.20,500 சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

போஸ்ட் ஆபீஸில் துவங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் வயதானவர்களுக்கு ஓய்வு காலத்தில் ரூ.20,500 மாத வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மத்திய அரசானது மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு அவர்களது முதுமை காலத்தில் உதவும் வகையில், “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை” போஸ்ட் ஆபீஸ் மூலமாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,500 வருமானமாக வழங்கப்படும். அதாவது, இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு மாதம் ரூ.20,500 வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்படுகிறது. இத்தகைய சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பெற முடியும். மேலும் சூப்பர் ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றவர்களும் இதன் பலனை பெறலாம்.

இத்திட்டத்தில் இணையும் நபர்கள் 1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதவாது பயனர்கள் 1,000 ரூபாய் முதல் 30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு அரசு 8.2% வட்டி வழங்குகிறது. இந்த வட்டி தொகையானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பயனர்களின் கணக்கில் செலுத்தப்படும். இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், வருமான வரி சட்ட பிரிவு 80C-ன் படி, பயனர்கள் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறுவார்கள்.

Read More :ரூ.500 நோட்டுக்கு வந்த சிக்கல்..!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்..!! மக்களே உடனே இதை பண்ணுங்க..!!

English Summary

The Senior Citizen Savings Scheme launched by the Post Office provides a monthly income of Rs 20,500 to the elderly during their retirement. We will see the details about it in this post.

Chella

Next Post

அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி..? அவரே சொன்ன பதிலை பாருங்க..!!

Sun Jun 9 , 2024
While there were reports that Annamalai will become the Union Minister, new information has come out that he will continue as the BJP state president.

You May Like