நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பன்மடங்கு அதிகரித்துள்ள அதே வேளையில் சைபர் குற்றங்களும் பெருகி வருகின்றன.. சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன முறைகளில் மோசடி செய்து பணத்தை திருடுகின்றனர்.. வேலையின்மை, ஆட்குறைப்பு மற்றும் போலி வேலைவாய்ப்பு அறிவுப்புகள் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன.. அந்த வகையில் யூ டியூப் வீடியோவுக்கு லைக் போடுவதன் மூலம் தினமும் ரூ.5000 சம்பாதிக்க முடியும் என்று ஒரு புதிய மோசடி நடந்து வருகிறது..
வாட்ஸ்அப், லிங்க்ட்இன் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்தி மக்களை இந்த மோசடி கும்பல் மக்களை ஏமாற்றுகின்றனர்.. அதாவது யூடியூப் வீடியோக்களை லைக் செய்வதற்கு ஒரு நாளைக்கு 5,000 பணம் பெறலாம் என்ற ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்..

அதாவது, முதலில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி உங்களுக்கு முதலில் மெசேஜ் அனுப்புகின்றனர்.. என்ன வேலை என்று நீங்கள் கேட்கும் பட்சத்தில், வீடியோவுக்கு லைக் போட்டால் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றனர்.. ஒரு வீடியோவுக்கு லைக் போட்டால் ரூ.50 கிடைக்கும் என்று அந்த மோசடி கும்பல் கூறுகின்றனர்..
மேலும் அதற்காக நீங்கள் 3 வீடியோ லிங்க்களை அனுப்பி, அவற்றுக்கு லைக் செய்து, அதற்கான ஸ்கீரின் ஷாட்டை பகிர வேண்டும் என்று கூறுவார்களாம்.. பின்னர் உங்களுக்குப் பணம் செலுத்துவதில் சில சிக்கல் உள்ளது என்று கூறி, எளிதாகப் பணப் பரிமாற்றம் செய்ய சில செயலிகளை பதிவிறக்கம் செய்யும்படி உங்களிடம் கேட்பார்கள். இந்த செயலிகளில் உள்ள மால்வேர் மூலம் அவர்கள் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர்.. கட்டண நுழைவாயில் சரிபார்ப்புக்கு ரூ.1 செலுத்த வேண்டும் என்று கேட்பார்கள்..
நீங்கள் ரூ.1 செலுத்திய உடன், மோசடி கும்பல் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றை பெறுவதுடன் OTP/மின்னஞ்சலுக்கான அணுகலையும் பெறுகின்றனர்.. இதன் மூலம் அவர்கள் பணத்தை எளிதாக திருடுகின்றனர்.. எனவே இதுபோன்ற வேலைவாய்ப்பு மெசேஜை யாரும் நம்பவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..