பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நிறுவனத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அல்லது பணியை முடித்தவுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பணியாளர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து வருங்கால வைப்பு நிதியை ஓய்வூதியத்தின் போது அல்லது ஓய்வுக்கு முன் எடுக்கலாம்.
குறிப்பாக மருத்துவ அவசரநிலை அல்லது குழந்தைகளுக்கான உயர்கல்விச் செலவுகள் போன்ற சில சூழ்நிலைகளில் பகுதியளவு பணத்தை திரும்ப பெறலாம்.. அதாவது 75 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகிறது. மேலும் ஊழியர்கள் பிஎஃப் பணத்தை பெற விண்ணப்பிப்பதற்கு முன், அவர்களின் கோரிக்கைகள் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
பிஎஃப் பணத்தை எடுக்க, ஊழியர்கள் தங்கள் UAN கணக்கு செயல்படுத்தப்பட்டுள்ளதா மற்றும் தங்களின் ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேலும் தங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி EPFO இன் இ-சேவா இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.. online services மெனுவில் காணப்படும் “Claim (Form-31, 19, 10C & 10D)” என்ற ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும். தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்ட பிறகு, அவர்கள் “Certificate of Undertaking” அல்லது பரிவர்த்தனையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.
மேலும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான நோக்கத்தை உறுதிப்படுத்த ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிப்பதும் அடங்கும். தேவையான தொகையை உள்ளிட்ட பிறகு, ஊழியர்கள் தங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெறுவார்கள், அதை அவர்கள் தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க அங்கீகரிக்க வேண்டும். போர்ட்டலில் தங்கள் உரிமைகோரலின் நிலையைச் சரிபார்க்கலாம், மேலும் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்படுவதற்கு பொதுவாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும்.
EPF விதிகள்
- ரூ.15,000/- வரை அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்கள் இந்த EPF திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.
- EPF-ஐ எளிதாக மாற்ற முடியும் என்பதால், ஒரு ஊழியர் வேலை அல்லது நிறுவனத்தை மாற்றும்போது வருங்கால வைப்பு நிதிக் கணக்கைத் திரும்பப் பெறத் தேவையில்லை.
- அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் வயது 54 அல்லது அதற்கு மேல் இருக்கும் போது EPF இன் 90% திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
- PF கணக்கில் 3 ஆண்டுகளுக்கு மேல் எந்தப் பங்களிப்பையும் பெறவில்லை என்றால் வட்டி வரவு வைக்கப்படாது.
- 20 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் EPFO க்கு பதிவு செய்ய வேண்டும்.