மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000 பணத்தை வைத்து நீங்கள் கூடுதல் லாபம் பெற முடியும். எப்படினு யோசிக்குறீங்களா? குறிப்பிட்ட வங்கியில் சேமித்தால் அதற்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. அதாவது இந்த தொகைக்கு என்று கூடுதலாக வட்டி கொடுக்கும் நிறைய திட்டங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023 செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1 கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களைப் பொருளாதாரச் சுதந்திரமுடையவர்களாக மாற்றும் பொருட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 2024 – 2025ஆம் ஆண்டு நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அன்றாடச் செலவிற்கும், சேமிப்பிற்கும் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த உரிமைத் தொகையை நமது வங்கிக் கணக்கில் சேமித்தால் 3 முதல் 4 சதவீதம் வரை வட்டி மட்டுமே கிடைக்கும். ஆனால், உரிமைத்தொகைக்கு 7.5 சதவீதம் வரை வட்டி தரக்கூடிய ஒரு சூப்பர் திட்டம் உள்ளது.
நீலகிரி மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் கூட்டுறவு வங்கி செயல்படுத்தி வருகிறது. நீலகிரியில் உரிமைத்தொகை கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக, கூட்டுறவு வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை இருந்தால் அதற்கு 3% வட்டி மட்டுமே வழங்கப்படும். ஆனால், அதுவே இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டம் மூலம் சேமித்தால் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சேமித்து வரும் பட்சத்தில் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Read more ; விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! 50% மானியத்தில் மின் மோட்டார்கள்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?