fbpx

இனி யூடியூப்பில் விளம்பரத்தை முழுசா பார்த்தேதான் ஆகனும்!… ஸ்கிப் செய்ய முடியாது!… அதிர்ச்சி அளித்த கூகுள்!

டிவியில் யூடியூப் பார்க்கும்போது வரும் 30 வினாடி விளம்பரங்களை இனி ஸ்கிப் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் யூடியூப் நிறுவனம் அதனுடைய பயனர்களுக்கு யூடியூப் செயலியில் பல்வேறு விதமான வசதிகளை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு மட்டுமில்லாமல் யூடியூப் கிரியேட்டர்ஸ்க்கும் பல வசதிகளை செய்து தருகின்றது. இதையடுத்து யூடியூப் நிறுவனம் தொலைக்காட்சி யூடியூப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளது. செல்போன்களில் யூடியூப் செயலியை பார்க்கும் பொழுது 30 வினாடி விளம்பரங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு 15 வினாடிகள் விளம்பரங்களாக இரண்டு முறை வரும். அதில் 5 வினாடி கழித்து விளம்பரத்தை ஸ்கிப் செய்து கொள்ளலாம். அதே போல யூடியூப் வலைதளத்திற்கு சென்று பார்த்தாலும் இதே நடைமுறை தான்.

இந்த நடைமுறையை இனி ஸ்கிப் செய்ய முடியாத அளவுக்கு யூடியூப் தளம் தகவலை பகிர்ந்துள்ளது. இனிமேல் தொலைக்காட்சியில் யூடியூப் பார்க்கும் பொழுது விளம்பரங்களை ஸ்கிப் செய்ய முடியாது என்று யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. தொலைக்காட்சியில் யூடியூப் வலைதளத்தில் வழங்கப்படும் இரண்டு 15 வினாடிகள் கொண்ட விளம்பரங்களுக்கு பதிலாக 30 வினாடிகள் கொண்ட NON SKIP விளம்பரங்களை காண்பிக்கப்படவுள்ளது. இந்த செயல் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

Kokila

Next Post

7 குழந்தைகளை பெற்றால் ரூ.1 கோடி பரிசு!... மக்கள் தொகையை அதிகரிக்க சீனா புதிய திட்டம்!

Sat May 20 , 2023
மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் 7 குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு 1 கோடி ரூபாய் பரிசு (இந்திய மதிப்பில் சுமார் 1200000 ரூபாய்) வழங்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரானா பாதிப்பால் அங்கு மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. இந்த பாதிப்பால் சீனா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு இன்னல்களை சந்தித்தது. அந்தவகையில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் புதிய அறிவிப்பை சீன […]

You May Like