இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மேம்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் பேங்கிங் ஆப் YONO for Every Indian அறிமுகம் செய்ததோடு, தனது ஏடிஎம் இயந்திரத்தில் புதிதாக Interoperable Cardless Cash Withdrawal (ICCW) சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ICCW சேவை மூலம் எஸ்பிஐ ஏடிஎம்-ல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல் பிற வங்கி வாடிக்கையாளர்களும் எவ்விதமான தங்கு தடையுமின்றி UPI QR Cash சேவையை பயன்படுத்தி டெபிட் கார்டு இல்லாமலேயே பணத்தை வித்டிரா செய்ய முடியும்.
தற்போது எந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரமாக இருந்தாலும், டெபிட் கார்டு வைத்து பணம் எடுத்துகொள்ள முடியும். சில வங்கி ஏடிஎம்களில் அந்த வங்கி வாடிக்கையாளர் மட்டும் டெபிட் கார்டு இல்லாமல் யூபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியை தற்போது நாட்டின் பல இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ள புதிய சேவையின் படி ICCW சேவை கொண்டு உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் அனைத்து வாடிக்கையாளர்களும் ஏடிஎம் இயந்திரத்தில் ஒருமுறை மட்டுமே காட்டப்படுடம் டைனமிக் கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பணத்தை வித்டிரா செய்ய முடியும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஞாயிற்றுக்கிழமை தனது புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் பேங்கிங் செயலியான ‘YONO for Every Indian’ ஐ அறிமுகம் செய்தது.
2017 ஆம் ஆண்டு YONO செய்லி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து சுமார் 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இதை ரிஜிஸ்டர் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த யூனோ செயலியில் மட்டும் 2023 ஆம் நிதியாண்டில் 78.60 லட்சம் சேமிப்புக் கணக்குகள் டிஜிட்டல் முறையில் திறக்கப்பட்டன. இப்புதிய மேம்படுத்தப்பட்ட YONO செயலி மூலம், வங்கி வாடிக்கையாளர்கள் ஸ்கேன் & பே, கான்டெக்ட்களில் இருக்கும் நபர்களுக்கு பணம் அனுப்புதல், பெறுதல் போன்ற சேவைகளை பெற முடியும்.