fbpx

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…! அலகு மாறுதலுக்கு வரும் 30-ம் தேதி வரை பதிவு செய்யலாம்…!

பெருநகர சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் உள்ள 190 காலி பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் மற்றும் பிறமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் 30.9.2023 வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பெருநகர சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் உள்ள 190 காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு/துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் மற்றும் பிறமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் 11.9.2023 முதல் 30.9.2023 வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எனவே, மேற்படி பெருநகர சென்னை மாநகராட்சி துறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கு துறை மாறுதல் மூலம் பணிபுரிய விருப்பம் உள்ள அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உரிய தடையின்மைச் சான்று பெற்றவர்கள் ( தடையின்மைச் சான்று பெற்றுள்ளவர்கள்) கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் EMIS இணையத்தில் 11.9.2023 முதல் 30.9.2023 வரைக்குள் துறை மாறுதல் கோரும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும். அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்..! கும்பகோணத்தில் 3 பேருக்கு டெங்கு உறுதி..! கடலூரில் 6 பேர் பாதிப்பு…!

Thu Sep 14 , 2023
கும்பகோணத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் கும்பகோணத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு பொது மருத்துவமணையில் 26 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேருக்கு டெங்கு […]

You May Like