fbpx

உங்கள் கால் விரல்களை வைத்தே முழு ஜாதகத்தையும் சொல்லலாம்..!! எப்படி தெரியுமா..? இதை தெரிஞ்சிக்கோங்க..!!

நம்முடைய குணாதிசயங்களுக்கும் கால் பாதங்களின் வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பல ஆய்வுகள் உறுதியாக கூறுகின்றன. பாதங்களின் வளைவுகளில் இருந்து கால் விரல்களின் வடிவம் வரை, நம்முடைய ஆளுமை குறித்த பல நுணுக்கமான தகவல்கள் ஒளிந்துள்ளன. இதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

எகிப்திய பாதம் :

உங்களின் பெருவிரல் நீளமாகவும், அதனை தொடர்ந்துள்ள விரல்கள் 45 டிகிரி கோணத்தில் இறங்கு வரிசையிலும் இருந்தால், அதற்கு எகிப்திய பாதம் எனப் பெயர். இந்தப் பாதம் உள்ளவர்கள் சுயமாக யோசிக்க கூடியவராக இருப்பீர்கள். உங்களிடம் பிடிவாத குணம் இருந்தாலும் படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். அடுத்தவர்களை உங்கள் வழிக்கு ஒத்துக்கொள்ள வைப்பதில் சாமர்த்தியமானவர். மற்றவர்களின் ரகசியங்களை பேணிக் காப்பதில் நம்பகமான மனிதராக இருப்பீர்கள்.

சதுர வடிவ பாதம் :

உங்கள் கால் பாதம் சதுர வடிவத்திலும், அனைத்து கால் விரல்களும் ஒரே அளவில் இருந்தால், நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? யதார்த்தமும் நம்பகத்தன்மையும் கொண்டவர். நேரத்தையும் உங்களிடம் இருக்கும் திறமைகளையும் சரியாக பயன்படுத்தும் நீங்கள், ஒரு கடுமையான உழைப்பாளி. கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவராக இருப்பீர்கள். மற்றவர்களோடு சகஜமாக பழகக் கூடியவராக இருப்பதால், எளிதாக அடுத்தவரோடு நட்பு பாராட்டுவீர்கள்.

ரோமன் பாதம் :

உங்கள் காலின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்கள் ஒரே உயரத்திலும் நான்காவது மற்றும் ஐந்தாவது விரல்கள் இறங்கு முகத்திலும் இருந்தால், இதனை ரோமன் பாதம் என்று கூறுவார்கள். அன்புள்ளம் கொண்ட நீங்கள் அடுத்தவர்களோடு எளிதாக பழகக் கூடியவர். புதிய மனிதர்களை சந்திக்கவும் அவர்களோடு உறவு முறையை வளர்த்துக்கொள்ளவும் தயங்க மாட்டீர்கள். உங்களின் நெட்வொர்க் மிகப்பெரியது. உங்கள் கருத்தை தன்னம்பிக்கையோடும் உறுதியாகவும் கூறுவீர்கள்.

கிரேக்க பாதம் :

உங்கள் பெருவிரலை விட 2ஆம் விரல் நீளமாக இருந்தால், அதை கிரேக்க பாதம் என அழைப்பார்கள். இதை நெருப்பு பாத வடிவம் என்று அழைப்பதுண்டு. இவர்கள் படைப்பாற்றலும், உணர்ச்சிமிக்கவருமான உள்ளுணர்வோடு இயங்குபவராக இருப்பார்கள். சாகச குணம் உங்கள் இயல்பிலேயே இருக்கும். புதிய சவால்களை ஆர்வத்தோடு எதிர்கொள்வீர்கள். பல வித்தியாசமான வழிகளில் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள முயல்வீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள்.

Read More : கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா..? தீயாய் பரவும் தகவல் உண்மையா..?

English Summary

Many studies confirm that there is a close connection between our personality and the shape of our feet.

Chella

Next Post

"எனக்கு அம்மா வேணும் பா" கதறி துடித்த 4 வயது சிறுவன்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Wed Nov 6 , 2024
man killed his wife and mother-in-law

You May Like