கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா..? தீயாய் பரவும் தகவல் உண்மையா..?

கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளில் மெகந்தி அல்லது மருதாணியை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில சமயங்களில் ஆண்களும் கைகளில் மருதாணி வைக்கின்றனர். ஆனால், சில நாட்களாக கையில் மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவல் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் கையில் போடப்பட்ட மருதாணியை ரசாயனம் கொண்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், மருதாணி விவகாரம் குறித்து தேர்தல் அலுவலரிடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. சில சமூகத்தினர் கொண்டாட்டங்களின் போது மருதாணி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்” என்று விளக்கம் அளித்தார்.

Read More : WhatsApp நிறுவனத்தின் மாஸ் அப்டேட்..!! Chat Filters பற்றி தெரியுமா..? பயனர்கள் குஷி..!!

Chella

Next Post

கால் விரல்களை வைத்தே உங்கள் முழு ஜாதகத்தையும் சொல்லலாம்..!! எப்படி தெரியுமா..?

Thu Apr 18 , 2024
நம்முடைய குணாதிசயங்களுக்கும் கால் பாதங்களின் வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பல ஆய்வுகள் உறுதியாக கூறுகின்றன. பாதங்களின் வளைவுகளில் இருந்து கால் விரல்களின் வடிவம் வரை, நம்முடைய ஆளுமை குறித்த பல நுணுக்கமான தகவல்கள் ஒளிந்துள்ளன. இதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். எகிப்திய பாதம் : உங்களின் பெருவிரல் நீளமாகவும், அதனை தொடர்ந்துள்ள விரல்கள் 45 டிகிரி கோணத்தில் இறங்கு வரிசையிலும் இருந்தால், அதற்கு எகிப்திய பாதம் எனப் […]

You May Like