fbpx

ஆஜராகும்போதே அமைச்சராக இருக்க முடியாது..!! உதயநிதியின் நெருக்கமானவருக்கு செல்லும் பொன்முடியின் இலாகா..?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிக்கிறார்.

பொன்முடி குற்றவாளி என்று என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால், இந்த தீர்ப்பு வந்த நிமிடத்திலேயே எம்எல்ஏ பதவியை இழந்து விட்டதாக சட்டப்பிரிவுகள் சொல்கின்றன. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை அறிந்தபோது, விழுப்புரத்தில் ஒரு அரசு நிகழ்ச்சியில் இருந்தாராம் பொன்முடி. பிறகு, அவசரம் அவசரமாக நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய பொன்முடி, தன்னுடைய வக்கீல்களை தொடர்புகொண்டு விசாரித்து விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டார். பிறகு, முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டும் பொன்முடி பேசியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற கிரிமினல் வழக்கறிஞர்கள் இந்த வழக்கு குறித்து கூறுகையில், ”எப்படி ஆலோசித்தாலும் பொன்முடி அமைச்சராக நீடிக்க முடியாது. தண்டனை அறிவிக்கப்படவிருப்பதால் அப்போது அவர் நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது காணொலி வழியாகவோ ஆஜராக வேண்டும். அப்போது அவர் அமைச்சராக இருந்தால் சட்ட சர்ச்சை உருவாகும். அதை முதல்வர் விரும்பமாட்டார். அதனால், தண்டனை அறிவிக்கப்படும் போது அவர் எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ இருக்கமாட்டார். அதற்கு முன்பாக ராஜினாமா செய்து விடுவார்” என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே, பொன்முடி ராஜினாமா செய்வதை அடுத்து அமைச்சரவையை மாற்றியமைக்கும் கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதாவது, பொன்முடியிடம் இருந்த உயர்கல்வி துறைக்கு புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவாரா? அல்லது இருக்கும் அமைச்சர் ஒருவரிடம் கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை ஒப்படைக்கப்படுமா? அல்லது அமைச்சரவை இலாகாக்களே மாற்றியமைக்கப்படுமா? என்கிற விவாதம் கோட்டையில் எதிரொலிக்கிறது.

இதை சாக்காக வைத்து, உதயநிதிக்கு நெருக்கமான முதல்முறை எம்எல்ஏக்கள் சிலர் உயர்கல்வித்துறையை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். குறிப்பாக, ஆயிரம் விளக்கு எம்எல்ஏ டாக்டர் எழிலன் ரகசிய முயற்சியில் இருக்கிறார் என்கிறது அறிவாலய வட்டாரம். எதுவானாலும் இன்றைய தீர்ப்புக்கு பின் தெரிந்துவிடும்.

Chella

Next Post

’தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு’..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Thu Dec 21 , 2023
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. தற்போது இந்த கீழடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய […]

You May Like