fbpx

கடைசி நேரத்துல இப்படி பண்ணிட்டாங்களே..!! பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போக முடியாது..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. இதனால், பேருந்துகளை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படும். மேலும், பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டத்தை தொழிற்சங்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து சீரான பேருந்து இயக்கம் நடைபெற வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், ஜனவரி 9ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் இயங்காது என்பதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வது கடினம் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் குடும்பத்துடன் பாஜகவில் ஐக்கியம்..!! நடைபயணத்தில் மக்களை கவரும் அண்ணாமலை..!!

Sat Jan 6 , 2024
சேலம் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ”என் மண், என் மக்கள்” நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு பாஜக அடையாள அட்டையை வழங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். அண்ணாமலையின் நடைபயணத்தால், பல பேர் பாஜகவில் இணைந்து […]

You May Like