National Girl Child Day: ஜனவரி 24 பெண் குழந்தைகளுக்கான தினமாக கடந்த 2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளுக்கு நேரும் பிரச்னைகளைத் தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்யவும், சமூகத்தில் அவர்களுக்கான சம உரிமையை அளிக்கவுமே இந்த நாள் கொண்டு வரப்பட்டது.
வளர்ந்து வரும் இந்தியாவில், தினம் தேய்கிறது பெண்களின் பாதுகாப்பும், அதன்வழி சுதந்திரமும். இரவு,பகல், வீடு, வேலை என 360 கோணத்திலும் பெண்களுக்கான அச்சுறுத்தல் சூழ்ந்திருக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறைக்கு இளமை, மூப்பு என வேறுபாடு இருப்பதில்லை. குழந்தை, குமரி என வன்முறையாளர்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது ஒருபுறம் என்றால் அதில் இந்த வயது குழந்தைகளும் அதில் அடங் குவது துரதிஷ்டவசமானது. குடும்பத்தில் அனைவரது அன்பை மட்டுமே பெறும் குழந்தை முதன் முத லாக வெளியே செல்லும் போது வெளியில் சக மனிதர்களிடம் பழக தொடங்குகிறது. இங்குதான் பெற்றவர்களின் முதல் பயிற்சி தொடங்குகிறது.
குழந்தைகளின் ரோல் மாடல் பெற்றோர்கள் தான். அதனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலை யும் உங்கள் குழந்தை கவனித்துவருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.அவர்களை தனிமை படுத்தாமல் இயன்றவரை அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இந்த வயதிலேயே குழந்தைகள் அவர்கள் வேலையை அவர்கள் செய்ய பழக்குங்கள். உதாரணமாக பள்ளிக்கு செல்லும் போது தண் ணீர் கேனை நிரப்பி கொள்வது. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது, சத்தான உணவை மறுக்காமல் சாப்பிட பழக்குவது, உரிய நேரத்தில் தூங்க செய்வது என்று பழக்குங்கள். அவ்வபோது நண்பர்கள் உறவினர்களோடு நாளை கொண்டாடுவதும் முக்கியம். குறிப்பாக இன்றைய காலத்தில் பெண் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் கற்றுதருவதும் அவசியம்.
இன்றைய சூழலில் அம்மா, அப்பா இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தை பள்ளியில் நடக்கும் விஷயத்தை யாரிடம் பகிர்ந்துகொள்வது என்னும் குழப்பத்தில் இருப்பார்கள். தினமும் அரைமணி நேரமாவது உங்கள் குழந்தைகளுக்கு ஒதுக்குங்கள். வகுப்பறையில் நடந்த விஷயங்களை பொறு மையாக கேளுங்கள். பிள்ளைகள் தவறு செய்வதையும் உங்களிடம் தெரிவிக்கும் வயது இது. இப்போது அவர்களை தண்டிக்காமல் அந்த தவறை சுட்டிகாட்டி அதனால் உண்டாகும் பிரச்சனைகளையும் பொறுமையாக எடுத்து கூறுங்கள்.இதே தவறை மீண்டும் செய்யும் போது கண்டிப்புடன் மன்னியுங்கள். இங்குதான் பல பெற்றோர்கள் தவறு செய்துவிடுகிறார்கள். இதனால் குழந்தைகள் அறியாமல் தவறு செய்தாலும் அம்மா அடித்துவிடுவார்கள் என்று தவறை மறைத்து சொல்கிறார்கள்.
இந்த இடத்தில் பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் வேறுவிதமான துன்புறுத்தலுக்கு உள்ளானாலும் உங்களிடம் சொல்ல தயங்குவார்கள். அப்படியும் அவர்கள் ஒருவித பயத்தோடு உலா வந் தால் அவர்களை தற்காப்பு பயிற்சிக்கு அனுப்பி வையுங்கள். இந்தவயதிலேயே அவர்களின் நண் பர்கள் அவர்களது நடவடிக்கைகளையும் கவனிக்க தவறாதீர்கள். தவறான சேர்க்கையாக இருந்தாலும் கண்டிப்பு காட்டாமல் காரணம் புரியவைக்கவும் தயங்காதீர்கள். அவர்கள் வளரும் போது உரிய தோழமையை நம்பிக்கையுடன் தேர்வு செய்ய இது உதவும்.
தினமும் அரைமணி நேரம் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அமர்ந்து விளையாடுங்கள், பேசுங்கள், தகவல் பரிமாறுங்கள், சமூகம் குறித்தும் பேசுங்கள். உரிய நேரத்தில் அவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏற்ப பாலியல் விஷயங்களை மேலோட்டமாக பரிமாறவும் தயங்காதீர்கள். இந்த வயது முதலே அதிகப்படி நேரம் செல்ஃபோன் பயன்படுத்துவதையும் இண்டர்நெட்டில் உலாவ விடுவதும் கூட உங்கள் கண் முன்னாடி மட்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருங்கள்.
இந்த வயதில் உடல் சார்ந்த மாற்றங்களை எதிர்கொள்ளும் பெண் குழந்தைகள் அதிகப்படியான குழப்பங்களை கொண்டிருப்பார்கள். அதை அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அம்மாக்கள் கற்றுத்தர வேண்டும். அப்பா, அண்ணன் தவிர வேறு வெளி ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதையும் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளின் அன்றாட நடவடிக்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
Readmore: சூப்பரான திட்டம்..! விவசாயிகள் ஆடு, மாடு வாங்க ரூ.15,000 வரை மானியம் வழங்கும் தமிழக அரசு…!