fbpx

PM Kisan திட்டத்தில் உங்களுக்கு இன்னும் ரூ.2,000 வரவில்லையா..? உடனே இதை பண்ணுங்க..!!

பிஎம் கிசான் நிதி திட்டத்திற்கான 16-வது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்டுள்ளார். பிஎம் கிசான் யோஜனா மூலமாக பலன் பெறக்கூடிய கோடிக்கணக்கான விவசாய குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டது. ஒருவேளை உங்களது பெயர் PM கிசான் பலன் பெறுவோர் பட்டியலில் இல்லாத பட்சத்தில் உங்களது ஆதார் கார்டு பயன்படுத்தி உங்களுடைய e-KYC நிலையை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு நீங்கள் kisan.gov.in என்ற போர்ட்டலுக்கு லாகின் செய்ய வேண்டும். PM கிசான் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் ஒரு சில விவசாயிகளுக்கு இன்னும் 2000 ரூபாய் பணம் கிடைக்கவில்லை. ஒருவேளை நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால் அது சம்பந்தமாக எப்படி புகார் எழுப்புவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PM கிசான் FAQகளின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட 4 மாத காலத்தில் அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் அப்லோடு செய்த பலன் பெறுவோர் பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டுமே இந்த 2,000 ரூபாய் தொகை வழங்கப்படுகிறது. அந்த நான்கு மாதங்களுக்கான தவணை அல்லது அடுத்தடுத்த தவணையை நீங்கள் பெறாத பட்சத்தில் அதற்கான காரணம் கண்டறியப்பட்டு, ஒருவேளை இந்த திட்டம் மூலமாக நீங்கள் பலன் பெறுவதற்கு தகுதி பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்த தவணைத் தொகையும் வழங்கப்படும். எனினும் புகாரை பதிவு செய்வதற்கு முன்பு பலன் பெறுவோர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

பலன் பெறுவோர் பட்டியலில் பெயரை சரி பார்ப்பது எப்படி?

படி 1: PM கிசான் யோஜனா- pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு செல்லவும்.

படி 2: ஹோம் பேஜில் காணப்படும் ‘Beneficiary Status’ டேப்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

படி 3: பின்வரும் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஆதார் நம்பர் அக்கவுண்ட் நம்பர் அல்லது மொபைல் நம்பர்.

படி 4: ‘Get Data’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

படி 5: பலன் பெறுவோரின் பட்டியலை இப்பொழுது உங்களால் பார்க்க முடியும்.

PM கிசான் யோஜனா: தவணை பணம் கிடைக்காதவர்கள் புகாரை பதிவு செய்வது எப்படி?

இது குறித்து புகார் அளிப்பதற்கு நீங்கள் கீழ் உள்ள எண்ணிற்கு போன் செய்யலாம் அல்லது இ-மெயில் அனுப்பலாம்.

இமெயில் ID: pmkisan-ict@gov.in. and pmkisan-funds@gov.in

உதவித் தொலைபேசி எண்: 011-24300606,155261

இலவச தொலைபேசி எண்: 1800-115-526

Read More : Lok Sabha தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டி..? சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு..!!

Chella

Next Post

BJP | புதுக்கோட்டை சமஸ்தான இளவரசி பாஜகவில் இணைந்தார்..!! அண்ணாமலை வரவேற்பு..!!

Wed Mar 6 , 2024
புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி, பாஜகவில் இணைந்துள்ளதற்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையுமான ராதா நிரஞ்சனி ராஜாயி தொண்டைமான் பாஜகவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். ‘புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையும், சிறந்த சமூக சேவகியுமான, சகோதரி, ராஜகுமாரி ராதா […]

You May Like