fbpx

’என்னை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும்’..! வி.கே.சசிகலா அதிரடி உத்தரவு..! பரபரப்பு

”எனது பிறந்த நாளுக்காக நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்க்க வேண்டும்” என தொண்டர்களுக்கு வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது பிறந்தநாள் அன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன். உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை. உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. அதே சமயம், நான் விரைவில் உங்கள் அனைவரையும் நேரில் வந்து சந்திக்க, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை எல்லாம் நான் பார்க்க இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன்.

’என்னை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும்’..! வி.கே.சசிகலா அதிரடி உத்தரவு..! பரபரப்பு

ஆகையால், தற்சமயம் எனது பிறந்த நாளுக்காக நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்க்க வேண்டும். தாங்கள் இருக்கும் பகுதியில் உங்கள் கண் முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளையே, எனக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பிறந்த நாள் பரிசாக மனதார ஏற்றுக் கொள்கிறேன். அதுவே, மறைந்த நம் புரட்சித்தலைவி அம்மாவுக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகவும் எண்ணுகிறேன். என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, பொறுமையோடு இருங்கள். ஒளிமயமான எதிர்காலம் நம் முன்னே நமக்காகவே காத்துக் கொண்டு இருக்கிறது.

’என்னை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும்’..! வி.கே.சசிகலா அதிரடி உத்தரவு..! பரபரப்பு

அதாவது, ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி..’ என்று புரட்சித்தலைவர் பாடியது போன்று, இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துதான் இன்றைக்கும் காத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’ரத்தக்கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிய போலீஸ்’..! குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல்..!

Tue Aug 16 , 2022
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், அவர்களின் ரத்தக்கறை படிந்த கைலிகளை போலீசார் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறைவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய […]
’ரத்தக்கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிய போலீஸ்’..! குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல்..!

You May Like