தன்னை அவுட் ஆகும்படி கூறிய ரசிகர்களுக்கு, சென்னை-குஜராத் இடையேயான போட்டியில் மதிப்புமிக்க வீரர் விருது வாங்கி ஜடேஜா பதிலடி ட்வீட் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அதன்படி முதலாவது குவாலிஃபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
போட்டியின்போது சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா, அப்ஸ்டாக்ஸ் (Upstox) சிறந்த மதிப்புமிக்க வீரர் என்ற விருதை வாங்கினார். இந்த போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் 16 பந்துகளில் 22 ரன்களும், சிறப்பாக பவுலிங் செய்து 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். முன்னதாக சென்னை அணி பேட்டிங் செய்யும் பொழுதெல்லாம் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்கு, விளையாடிக் கொண்டிருக்கும் ஜடேஜாவை ஆட்டமிழக்கும் படி தோனியின் அன்பான ரசிகர்கள் ஜடேஜாவிடம் மைதானத்தில் கோஷம் எழுப்பினர். இந்தநிலையில், சிறந்த மதிப்புமிக்க வீரர் விருது வாங்கிய ஜடேஜா, தனது ட்வீட்டில், அப்ஸ்டாக்ஸ்- க்கு நான் மதிப்புமிக்க வீரர் என தெரிகிறது, ஆனால் சில ரசிகர்களுக்கு தெரிவதில்லை என கூறியுள்ளார்.