டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, இந்த பெண்ணை ஆபாச படம் பார்க்கும்படி தொடர்ந்து அவரது கணவர் தொல்லை கொடுத்து வருகிறாராம். அதுவும் இல்லாமல், அந்த ஆபாச பட நடிகைகள் அணியும், டிரஸ்களை போலவே, மனைவியையும் அணிய சொல்லி டார்ச்சர் செய்கிறாராம். அந்த படத்தில் உள்ளதைபோலவே, டிரஸ் செய்துகொண்டு, கணவர் முன்னாடி போய் நிற்க வேண்டுமாம். இப்படி ஒரு ஆசையை, நீண்ட நாட்களாகவே அந்த கணவர் மனைவி மீது திணித்து வந்துள்ளார். ஆனால், இதற்கு மனைவி சம்மதிக்கவில்லையாம். இருப்பினும், நாளுக்கு நாள் கணவரின் தொல்லை அதிகமாகிவிட்டதாம். அதனால், ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனைவி போலீஸுக்கே போய்விட்டார். கணவர் மீது புகாரையும் தந்திருக்கிறார்.
இதுதொடர்பான அந்த பெண் அளித்த புகாரில், “ஆபாசப் படங்களைப் பார்க்கவும், ஆபாச நடிகைகளைப் போல உடை அணியுமாறு துன்புறுத்துகிறார். அத்துடன் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த பெண்ணின் கணவன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதை பற்றி துணை கமிஷனர் ரோகித் மீனா கூறுகையில், “வழக்கு நடந்து வருகிறது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வாக்குமூலங்கள் டிஜிட்டல் மற்றும் பிற ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன” என்றார். அந்த பெண்ணின் கணவரை போலீசார் தற்போது கைது செய்திருக்கிறார்கள். அவரது செல்போன், மற்றும் கம்ப்யூட்டர்களையும் பறிமுதல் செய்து, அதில் உள்ள விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 30 வயதாகிறது. திருமணம் ஆனதில் இருந்தே இப்படித்தான் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து கணவர் திருந்தாத நிலையில், போலீஸ் ஸ்டேஷன் வரை இந்த விவகாரம் வந்து நின்றுள்ளது.
நொய்டாவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் அந்த பெண்ணின் கணவர்.. திருமணமான புதிதில் கணவனின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இந்த பெண்ணுக்கு தெரியவில்லை. அதற்கு பிறகுதான், ஆபாச வீடியோவுக்கு அடிமையாகியிருப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். பெண்ணின் திருமணத்துக்கு, அவருடைய அப்பா ரூ.3 லட்சத்தை வரதட்சணையாக கொடுத்துருக்கிறார். மீதித்தொகையை தவணை முறையில் தருவதாக உறுதியளிக்கவும், அவரது மாமியார் சம்மதமும் தந்திருக்கிறார். ஆனாலும், செக்ஸ் டார்ச்சர் விஷயத்தை திசைதிருப்பவே, வரதட்சணை மேட்டரை கையில் எடுத்து, அதன்மூலம் டார்ச்சரை அதிகப்படுத்தி வந்திருக்கிறார் கணவர்.
இந்த ஆபாச பட நடிகைகளை போலவே டிரஸ் அணிய சொல்லி கட்டாயப்படுத்தியதால் பலமுறை தம்பதிக்குள் தகராறு நடந்தள்ளது. திருமணமாகி 3 நாட்களில், மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்திலும், உடலுறவு கொள்ளுமாறு மனைவியை கட்டாயப்படுத்தியிருக்கிறார்.. ஆபாச படம் பார்ப்பதில் அடிமையாக இருப்பதை போலவே, மதுபோதைக்கும் அடிமையானவர்.. செயின் ஸ்மோக்கரும்கூட.. பலமுறை உடல்ரீதியாக அடித்து உதைத்து மனைவியை காயப்படுத்தியும் வந்துள்ளார்.
மனைவி என்ற முறையில், துளிகூட மரியாதை தராமல் மிக மிக கேவலமாக நடத்தியிருக்கிறார்.. அதிலும், ஆபாச பட நடிகைகள், நடிகர்களை பற்றி ஸ்பெஷலான தகவல்களை திரட்டி வைத்திருப்பாராம்.. அந்த வகையில், தனக்கு மிகவும் பிடித்த ஆபாச நட்சத்திரங்களைப்போலவே, தனக்கும் அசைவம் சமைத்து தரும்படி மனைவியை கட்டாயப்படுத்தியிருக்கிறார்.. இப்போதைக்கு விசாரணை நடக்கிறது. அந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணையை நடத்த உள்ளோம்” என்றனர்.