fbpx

காது சுத்தமா கேட்காத வரை பாதிப்பு தெரியாது!… இனிமேல் இதை செய்யாதீர்கள்!… கவனமா இருங்க!

அதிகளவில் ஹெட் ஃபோன் பயன்படுத்துவதால் காது சுத்தமாக கேட்காத வரை பாதிப்பு தெரியாது என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில பார்க்கலாம்

இரவில் மெல்லிய இசையை கேட்டு தூங்கும் போது சுகமாக இருக்கும் என்பது சரி. ஆனால் ஹெட் ஃபோன் கேட்டு தூங்குவது ஃபேஷனாகிவிட்டது. இது எந்தளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பது தெரிந்தால் இனி ஹெட்ஃபோன் யூஸ் செய்யவே தயங்குவீர்கள். செல்ஃபோன் வந்த பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுற்றுப்புறமே மறந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இரவு முழுவதும் ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பாட்டுகேட்டால் உலகமே மறந்துதான் போகிறது. ஆனால் இவை தரும் கேடுகள் சொல்லி மாள்வதில்லை. குறிப்பாக இளவயதினர் நாள் முழுக்க ஹெட் ஃபோன் பயன்படுத்திவருவதை கண்கூடாகவே பார்க்கிறோம். இது குறித்த விழிப்புணர்வை அளிக்க வேண்டிய பெரியவர்களும் உடன் சேர்ந்து ஹெட் ஃபோன் பயன்படுத்தும் போது இதன் விளைவை ஆபத்துக்கு பிறகே அறிந்துகொள்கிறோம்.

ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்பாடு மற்றும் தனிப்பட்ட ஆடியோவின் ஒலி அலைகள் காரணமாக 1. 1 பில்லியன் இளைய தலைமுறையினர்கள் காது கேளாத அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காதுகேளாமை பிரச்சனை மன ஆரோக்கியம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வரை பாதிப்பை உண்டாக்க கூடும். செல்ஃபோன் பயன்பாடு என்பது அவசரத்துக்கு மட்டுமே என்னும் நிலை மாறி அநாவசியத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. வீட்டிலும் வெளியிலும் பயணங்களிலும் ஏன் சாலை ஒரங்களிலும் கூட தலையை குனிந்தபடி செல்ஃபோனை பார்த்து கொண்டே செல்வதும், காதில் ஹெட் ஃபோன் மாட்டிகொண்டே இருப்பதும் என செல்ஃபோன் ஆறாம் விரலாகவே மாறிவிட்டது. உள்ளங்கையில் உலகம் என்று பெருமை பட்டாலும் இது தரும் ஆபத்து அளவில்லாததும் கூட.

காதுகளில் ஹெட்ஃபோன் மாட்டிகொண்டு பேசுவதை காட்டிலும் சத்தமாக பாட்டு கேட்பதை பலரும் விரும்புகிறார்கள். தொடர்ந்து அதிக நேரம் பாட்டு கேட்கும் போது செவிப்புலன் இழப்பு அல்லது டின்னிடஸ் ஏற்படலாம் மேலும் தொடர்ந்து நீடிக்கும் போது காதுகளின் உணர்ச்சி உயிரணுக்களின் நிரந்தர சேதத்துக்கு வழிவகுக்க கூடும். இவை மீண்டும் மீட்க கூடிய நிகழ்வு அல்ல. இது காது கேளாமை வரை கொண்டு சென்றுவிடும்.

இயல்பாக செல்ஃபோனை நேரடியாக காதில் வைத்து பேசாமல் ஹெட் ஃபோன் மூலமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சு பாதிப்பு குறைய செய்யும். என்றாலும் ஹெட் ஃபோனை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தினாலும் அது சேதத்தை உண்டாக்கும். ஹெட்ஃபோன் பயன்பாடு அளவோடு இருக்க வேண்டும். காதுக்குள் 90 டெசிபல் அளவுக்கு ஒலியை ஹெட்ஃபோன் அனுப்புவதால் காதுகேளாமை காரணமாகிறது. 5 நிமிடங்கள் இடைவிடாமல் 100 டெசிபல் ஒலியை கேட்டால் மிகவும் சிரமம். இது தொடர்ந்து இருக்கும் போது எவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என்று அறிந்துகொள்ளுங்கள்.

நமது காதுகள் மூன்று பகுதிகளால் ஆனவை இது ஒலிகளை செயலாக்கும் வேலைகளை செய்பவை. வெளிப்புறம் காது, நடுத்தர காது மற்றும் உள்காது போன்றவை ஆகும். உள்காது கோக்லியா என்று அழைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதி சிறிய முடி செல்களை கொண்டிருக்கிறது. இந்த மயிர் செல்கள் மூளைக்கு ஒலி செய்திகளை அனுப்ப உதவுகிறது. செய்திகள் சத்தம் அதிகமாக உரக்க இருக்கும் போது அது முடி செல்களை சேதப்படுத்திவிடக்கூடும். இதனால் செய்திகளை மூளைக்கும் அனுப்பும் கோக்லியா செயல்பட முடியாமல் போகிறது.

பொதுவாக உடலில் மற்ற பகுதிகளில் ஏற்படும் சேதம் போலன்றி உள்காது சேதம் ஒரு போதும் குணமடையாது. காலப்போக்கில் இவை அதிக சேதத்தை சந்திக்கும் போது செவிப்புலன் மேலும் மோசமடையகூடும். இதில் கொடுமையான விஷயமே இந்த பாதிப்பு தீவிரமாகும் போது தான் நம்மால் கண்டறியவே முடியும். ஏனெனில் செவிப்புலன் இழப்பு என்பது படிப்படியாக நடப்பதால் அவை தீவிரமாகும் வரை தங்களுக்கு இந்த பாதிப்பு இருப்பதே நிறைய பேருக்கு தெரியாமல் போகலாம்.

ஹெட்ஃபோன் மாட்டிகொண்டே தூங்கும் போது அவை உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கிவிட்டது என்பதை சில அறிகுறிகளை கொண்டே தெரிந்துகொள்ளலாம். காதுகளில் ஏதேனும் சத்தம் வருவது. காதுகளுக்குள் திடீர் என உரக்க சத்தம் வருவது. ஒருவர் பேசிய பிறகு அல்லது சத்தம் வந்தபிறகு உங்கள் காதுகளில் வந்து விழுவது எல்லாமே உங்கள் செவிப்புலன் பாதிப்பு அடைவதற்கான அறிகுறிகளே.

அதிக சத்தம் மிகுந்த இடங்களில் இயன்றவரை ஹெட் ஃபோன் பயன்படுத்த கூடாது. அதே நேரம் அந்த மாதிரியான இடங்களில் அதிக நேரம் இருக்கவும் கூடாது. குறிப்பாக இரவு நேர விடுதிகள், பார்களில் அதிக நேரம் தங்க கூடாது. இங்கு அதிக சத்தத்தை தொடர்ந்து உள்வாங்குவது கூட செவிப்பறையை பாதிக்க செய்யும். சத்தமில்லாத இடங்களிலும் ஹெட்ஃபோன் பயன்படுத்தும் போது சத்தம் இல்லாமல் குறைவான ஒலி அளவில் சத்தம் வரும்படி அமைத்து மாட்டிகொள்ள வேண்டும். இதன் மூல செவிப்புலன் பாதிக்காமல் பார்த்துகொள்ள முடியும். இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஹெட் ஃபோன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஹெட்ஃபோன் பயன்படுத்துவதில் மற்றொரு தவறு ஒரே ஹெட் ஃபோனை பலரும் பயன்படுத்துவதுதான். இதனால் காது சார்ந்த தொற்று நோய்கள் தாக்க கூடும்.

Kokila

Next Post

மாணவர்களே இன்று விடுமுறை கிடையாது..!! உடனே பள்ளிக்கு புறப்படுங்க..!! வெளியான அறிவிப்பு..!!

Tue Oct 24 , 2023
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்றைய தினம் விஜயதசமியை முன்னிட்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நவராத்திரி பண்டிகையின் 10ஆம் நாளான இன்றைய தினம் விஜயதசமி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்குவார்கள். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும். இந்நாளில் பள்ளிகள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பது வழக்கம். […]

You May Like