பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஹன்சா பள்ளத்தாக்கு. இங்கு வசிக்கும் ஹன்சா சமூகத்தினர் மற்ற மக்களை விட மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்கள். 150 ஆண்டுகள் வரை வாழ்கிறார்கள். பெண்கள் 90 வயதிலும் தாயாக முடியும், 80 வயது வரை இளமையாக காட்சியளிக்கிறார்கள்.
உலக நாடுகளிலேயே ஜப்பானில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்… ஜப்பானியர்கள்தான் அதிக ஆயுட்காலம் கொண்ட நபர்களாகவும் இருக்கிறார்கள். மாரடைப்பு, மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், இதய நோய் போன்றவை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அங்கு குறைவாக இருக்கிறது. மேலும் ஜப்பானியர்கள் தங்களை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதும் ஒரு காரணம் என்கிறார்கள்.. ஆனால், இந்த ஜப்பானியர்களுக்கே டஃப் தந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.
பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தானின் ஹன்சா-நகர் மாவட்டத்தில் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக செல்கிறது இந்த பள்ளத்தாக்கு. இந்த ஹன்சா பள்ளத்தாக்கு மொத்தம் மூன்று பகுதிகளாக உள்ளது.. மேல் ஹன்சா (கோஜல்), மத்திய ஹன்சா மற்றும் கீழ் ஹன்சா (ஷினாகி). கிட்டத்தட்ட 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகிறார்கள். ஹன்சா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ‘புருஷோ’ என்று பெயர்.. இவர்களின் மொழியும் புருஷாஸ்கி’ என்று அழைக்கப்படுகிறது.. இந்த பள்ளத்தாக்கில் உள்ள ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், எல்லாருமே இளமையாகவே இருப்பார்களாம்.. ஆண்கள், பெண்கள் என யாருக்குமே வயதாகாமலேயே உள்ளதாம்.
இவர்களின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? 120 முதல் 150 வருடங்கள் வரை வாழ்கிறார்களாம்.. இந்த பெண்கள் 90 வயதிலும் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள முடியும்.. 80 வயது வரை இளமையாகவே இருப்பார்களாம்.. இயற்கையிலேயே மனபலம், உடல்பலம் உள்ளதால், இவர்கள் யாருமே மருத்துவமனைக்கு போவது கிடையாதாம்.. உலகின் மிக அழகான பெண்களில், இந்த ஹன்சா பள்ளத்தாக்கு பெண்களும் அடங்குவர்.
60-70 வயது பெண்கள், பார்ப்பதற்கு 20-25 வயது பெண்கள் போலவே இருப்பார்கள்.. இந்த பெண்கள் இவ்வளவு இளமையாக இருப்பதற்கு காரணம், அவர்கள் இமயமலைப் பனிப்பாறையிலிருந்து உருகிய தண்ணீரை குடிக்கிறார்கள்.. அதில்தான் குளிக்கிறார்கள்.. அதில்தான் சமைக்கிறார்கள்.. இந்த நீரில் மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
இந்த சமுதாய மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர்… இவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவார்கள்.. அந்த அளவுக்கு சுறுசுறுப்பானவர்கள்.. இவர்கள் யாருமே சைக்கிள் உட்பட எந்த வாகனங்களையும் பயன்படுத்துவதில்லை.. பெரும்பாலும் நடந்தே செல்கிறார்கள். இவர்களின் பிரதான உணவு இறைச்சி ஆகும்.. ஆனாலும், ஏதாவது முக்கியமான நாட்களில் மட்டுமே இறைச்சியை சாப்பிடுகிறார்கள்.