அறிமுக மலையாள இயக்குனரான ஜோசப் மனு ஜேம்ஸ் நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 31.
2004-ம் ஆண்டு சாபு ஜேம்ஸ் இயக்கத்தில் உருவான I am Curious என்ற படத்தின் மூலம் ஜோசப் மனு ஜேம்ஸ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றினார். இந்நிலையில் நிமோனியா பாதிப்பு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஜோசப் மனு அனுமதிப்பட்டார்..

மேலும் அவருக்கு கல்லீரல் அழற்சி சிகிச்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி, நேற்று முன் தினம் உயிரிழந்தார்.. அவர் கல்லீரல் அலற்சி நோயால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. அவரது இறுதிச் சடங்கு, நேற்று எர்ணாகுளத்தில் நடைபெற்றது. குறவிலங்காட்டில் உள்ள மரியம் பேராயர் தேவாலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜோசப் மனுவின் அகால மரணம் மலையாள திரையுலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்..
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஜோசப் மனு தனது முதல் படமான நான்சி ராணியின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இப்படத்தில் அஹானா கிருஷ்ணா மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர், மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் முடிவடைந்த நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..